கடன் பிரச்சினைகள் எளிதாக நீங்குவதற்கு சூட்சும வழிபாடு!

18 Mar, 2025 | 05:17 PM
image

தற்போதைய காலகட்டத்தில் கடன் வாங்காதோர் எவருமில்லை. அதேநேரம் ஒவ்வொரு மாதமும் நேரம் தவறாமல் கடனையும் வட்டியையும் செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 

கடன் தொல்லை தாங்க முடியாமல் தங்கள் இன்னுயிரை தாமே மாய்த்துக் கொள்பவர்களும் நிறைய பேர் இருக்கின்றனர். இவ்வாறான சந்தரப்பங்களில் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வாய்ப்பில்லாத சந்தர்ப்பங்களில் அதற்கான வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள எமது ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சுமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள். 

அதுகுறித்து பார்ப்போம்.

  • நீங்கள் வசிப்பது சொந்த வீடோ வாடகை வீடோ, ஓரளவு பெரிதாக இருக்கும் ஐந்து மண் தொட்டிகளை வாங்கி உங்கள் வாஸ்து நிபுணர்களின் அறிவுரைப்படி கடனை நீக்குவதற்கான பிரத்யேக திசையில் அதனை வைத்துக்கொள்ள வேண்டும்.  அதில் பவளமல்லி, தொட்டால் சிணுங்கி, கரு்ந்துளசி, பிரண்டை, கற்றாழை ஆகிய ஐந்து செடிகளை பதியமிட்டு வளர்த்து நீர் ஊற்றி சரியாக பராமரிக்க வேண்டும். அப்போது அதிலிருந்து வெளியாகும் ஆரா எனப்படும் சூட்சும ஆற்றல் உங்கள் வீட்டை நேர்நிலை ஆற்றல் மிக்கதாக மாற்றும். பின் உங்கள் எண்ணத்தில் மாற்றங்கள் ஏற்படும்.
  • நீங்கள் உணவு முறையை சரியாக பராமரித்தால் வயிறு சம்பந்தப்பட்ட எந்த உபாதைகளும் ஏற்படாது. வயிற்றுப் புண் ஆகிய பிரச்சினைகள் ஏற்பட்டால் நீங்கள் கடன் வாங்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். இந்த பிரபஞ்சம் உங்களுக்கு உணர்த்தும் சூட்சுமமான குறிப்பு இது. கடனில் விழ விரும்பாதவர்கள் வயிறு சார்ந்த ஆரோக்கியத்தை கவனமாக பின்பற்ற வேண்டும். 
  • சனிக்கிழமைகளில் உங்களுடைய வீடு இருக்கும் பகுதியிலுள்ள காவல் தெய்வத்தை அந்த ஆலயத்துக்கு சென்று வணங்க வேண்டும். இதனை தொடர்ச்சியாக செய்யும்போது கடன் கொடுத்தவர்கள் உங்களுக்கு நெருக்கடி கொடுப்பதை குறைத்துக் கொள்வார்கள். இதனால் அவர்கள் உங்களுக்கு கூடுதல் அவகாசத்தைக் கொடுக்கக்கூடும். அதுமட்டுமின்றி கடனை மீளச் செலுத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். எனவே இதனை துல்லியமாக அவதானித்து பின்பற்றி கடனை திருப்பிச் செலுத்தி மகிழ்ச்சியாக இருக்கவும். 

தொகுப்பு - சுபயோக தாசன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்