பட்டலந்த அறிக்கை குறித்து சட்ட அமுலாக்க துறையே தீர்மானிக்கும் - அரசாங்கம்

18 Mar, 2025 | 05:22 PM
image

(எம்.மனோசித்ரா)

பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கையை அரசாங்கம் தீர்மானிக்கப் போவதில்லை. மாறாக சட்ட அமுலாக்க நிறுவனங்களே அதனைத் தீர்மானிக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அல் ஜசீரா நேர்காணலில் தெரிவித்திருந்தார்.எனவே, அது செல்லுபடியாகாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே தான் மும்மொழிகளிலும் அந்த அறிக்கையை நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றோம். பட்டலந்த வீடமைப்பு திட்டம், சட்ட விரோதமாக தடுத்து வைத்தல் பிரதேசம் மற்றும் வதை முகாம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையிலுள்ள காரணிகள் தொடர்பில் மேலும் ஆழமாக மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. மேலும் இவ்வறிக்கை சட்டமா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ள குழுவின் பரிந்துரைகள் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எனவே, பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கையை அரசாங்கம் தீர்மானிக்கப் போவதில்லை. மாறாக சட்ட அமுலாகக்க நிறுவனங்களே அதனைத் தீர்மானிக்கும்” என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொத்தட்டுவ பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது...

2025-04-21 13:01:10
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; வேட்புமனுக்கள்...

2025-04-21 13:02:16
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் தாயும்...

2025-04-21 12:19:26
news-image

மின்னல் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய்...

2025-04-21 11:53:04
news-image

யாழ். மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2025-04-21 12:27:15
news-image

ஹொரவ்பொத்தானையில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-04-21 11:27:32
news-image

பண்டாரவளை- பூனாகலை பிரதான வீதியில் மண்சரிவு!

2025-04-21 12:28:06
news-image

சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு...

2025-04-21 12:27:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச...

2025-04-21 12:04:08
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்கு...

2025-04-21 12:03:11
news-image

update ; கெப் வண்டி விபத்து...

2025-04-21 12:13:38
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-21 11:59:15