இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து 

Published By: Digital Desk 3

18 Mar, 2025 | 05:01 PM
image

இந்திய பிரதமர் நரேந்தி மோடியை இசைஞானி இளையராஜா இன்று செவ்வாய்க்கிழமை (18) சந்தித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா 35 நாட்களில் எழுதி முடித்த முழு சிம்பொனியை  ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் கடந்த 8ஆம் திகதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றினார். இதன் மூலம் ஆசிய கண்டத்தில் சிம்பொனியை எழுதி, சர்வதேச அளவில் அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.  

இந்நிலையில், இந்திய பிரதமர் மோடியை இளையராஜா சந்தித்து தனது சிம்பொனி தொடர்பாக வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த இளையராஜா, “பிரதமர் மோடியுடன் மறக்கமுடியாத சந்திப்பு. எனது சிம்பொனி ‘வேலியன்ட்’ உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். அவரது பாராட்டையும் ஆதரவையும் பணிவுடன் பெற்றுக் கொண்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்திய பிரதமர் மோடி, 

நமது இசை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இசை ஜாம்பவான் ராஜ்சபா உறுப்பினர் இளையராஜாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. 

அவர் எல்லா வகையிலும் ஒரு முன்னோடி, சில நாட்களுக்கு முன்பு லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி வேலியண்ட் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றியதன் மூலம் மீண்டும் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி உலகப் புகழ்பெற்ற ரோயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நிகழ்த்தப்பட்டது. இந்த மகத்தான சாதனை அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது - இது உலக அளவில் சிறப்பை மறுவரையறை செய்து வருகிறது என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right