பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய பிரதமர் மோடி வாழ்த்து !

Published By: Digital Desk 3

18 Mar, 2025 | 04:47 PM
image

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். 

அதில் கூறியிருப்பதாவது,

"இந்திய மக்களின் சார்பாக, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, புகழ்பெற்ற விண்வெளி வீரர் மைக் மாசிமினோவை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது, உங்களைப் பற்றியும், உங்கள் சாதனைகளைப் பற்றியும் பேசினோம். எங்கள் உரையாடலின் தொடர்ச்சியாக, உங்களுக்கே நேரடியாக கடிதம் எழுதுகிறேன்.

நான் அமெரிக்காவுக்கு வந்தபோது, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பைடனுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, உங்கள் நலம் குறித்து விசாரித்தேன். 140 கோடி இந்தியர்களும் உங்கள் சாதனைகளால் பெருமைப்படுகின்றனர்.

நீங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், எங்கள் இதயத்துக்கு நெருக்கமாகவே இருக்கிறீர்கள். உங்கள் பாதுகாப்பிற்கும் வெற்றிக்காகவும், இந்திய மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

பூமிக்கு திரும்பியவுடன், இந்தியாவில் உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறோம். இந்தியா, தனது புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்கத் தயாராக உள்ளது.

நீங்களும், வில்மோரும் பாதுகாப்பாக பத்திரமாக திரும்புங்கள் என மனமார்ந்த வாழ்த்துக்கள்!" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2025-04-21 12:12:11
news-image

மீண்டும் அதே தவறை செய்தார் அமெரிக்க...

2025-04-21 11:54:12
news-image

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன்...

2025-04-20 13:15:31
news-image

ஈக்குவடோரில் சேவல் பந்தயத்தில் பார்வையாளர்கள் மீது...

2025-04-20 12:46:18
news-image

மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு...

2025-04-20 09:58:13
news-image

அவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த கடலலைகள் தாக்கி ...

2025-04-20 10:13:22
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; வட இந்தியா,...

2025-04-19 14:11:35
news-image

இந்தியாவில் இடிந்து விழுந்த மாடிக் கட்டிடம்...

2025-04-19 11:09:47
news-image

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா...

2025-04-19 10:01:20
news-image

ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த...

2025-04-18 16:52:31
news-image

உங்கள் தேசத்தின் சிறுபான்மையினர் நலனை பேணவும்’...

2025-04-18 15:24:04
news-image

உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவிற்கு வழங்குவது...

2025-04-18 14:42:36