மீண்டும் திரையில் 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ்

18 Mar, 2025 | 04:15 PM
image

விஜய் ஸ்ரீ இயக்கத்தில், ஜி.வி. இன்டர்நெஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டத்தோ கணேஷ் மற்றும் விஷால் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ் நடிக்கிறார். 

இவர் 1980களில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியடைந்த பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானார். அவர் மீண்டும் இப் படத்தில் நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இத் திரைப்படத்தில் டத்தோ கணேஷ்,  அனித்ரா நாயர், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி ஆகியோரும் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் மலேஷியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான டீசர் மலேசியாவில் வெளியிடப்படும் என்பதையும் படக்குழு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right