ஆறுமுக குமார் இயக்கத்தில், 7CS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் ஏஸ் (ACE).
இத் திரைப்படத்தில் ருக்மணி வசந்த், யோகி பாபு,திவ்யா பிள்ளை, பப்லு,ராஜ்குமார் ஆகியோர் றடித்துள்ளனர். கொமர்ஷல் என்டர்டெயினராக உருவாகியிருக்கும் இத் திரைப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இப் படத்தின் அறிமுக காணொளி வெளியாகி சுமார் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது.
இந்நிலையில் தற்போது இப் படத்தின் முதல் பாடலான 'உருகுது உருகுது உறைபனி உருகுது' எனும் பாடலுக்கான காணொளி வெளியாகியுள்ளது.
பாடலாசிரியர் தாமரையின் வரிகளில் பாடகி ஸ்ரேயா கோஷலும் பாடகர் கபில் கபிலனும் இணைந்து பாடியுள்ளனர்.
இப் பாடலில் விஜய் சேதுபதி மற்றும் ருக்மணி வசந்த் இருவரும் தங்களுக்குள் அன்பைப் பகிர்ந்து கொள்வதோடு மெல்லிசையில் அமைந்திருப்பதால் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM