(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
கிரிக்கெட் சபையும், அரசாங்கமும் முரண்பட்டுக்கொண்டால் வீரர்களே பாதிக்கப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு என்ற ரீதியில் பின்னடைவை எதிர்கொள்ள நேரிடும். கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலைமையே ஏற்பட்டது.
கிரிக்கெட் உட்பட விளையாட்டு சங்கங்கள் அரசியல் தலையீடுகளில் இருந்து விடுபட்டு சுயாதீனமான முறையில் செயற்பட்டால் சிறந்தவர்கள் பதவிகளுக்கு தெரிவாகுவார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கொவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார பாதிப்பினால் வீழ்ச்சியடைந்துள்ள கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்தின் வரிகொள்கைகள் தொழில் முயற்சியாளர்களுக்கு சாதகமாக அமையுமா என்பது சந்தேகத்துக்குரியது.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே வரி கொள்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் தேவைகளுக்கு அமைவாக வரிக் கொள்கை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு கடந்த அரசாங்கங்கள் அனைத்தும் தொழில் முயற்சியாளர்களுக்கு பல்வேறு வழியில் நிவாரணம் மற்றும் சலுகைகளை வழங்கியுள்ளன. ஆகவே தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.
கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி தொடர்பில் பேசப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று நாங்கள் குறிப்பிடவில்லை. கிரிக்கெட் சபையும், அரசாங்கமும் முரண்பட்டுக்கொண்டால் வீரர்களே பாதிக்கப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு என்ற ரீதியில் பின்னடைவை எதிர்கொள்ள நேரிடும். கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலைமையே ஏற்பட்டது. கிரிக்கெட் உட்பட விளையாட்டு சங்கங்கள் அரசியல் தலையீடுகளில் இருந்து விடுப்பட்டு, சுயாதீனமான முறையில் செயற்பட்டால் சிறந்தவர்கள் பதவிகளுக்கு தெரிவாகுவார்கள்.
கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும்.அதை விடுத்து ஒருவருக்கொருவர் விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருந்தால் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM