(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வாவின் நிதிக்கு நாங்கள் அன்றும் அடிபணியவில்லை. இன்றும் அடிபணியவில்லை. என்றும் அடிபணிய போவதில்லை. ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எவரும் கிரிக்கெட் சபையிலோ, சங்கங்களிளோ இல்லை. கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் மோசடி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வோம் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கொவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார பாதிப்பு ஆகிய காரணிகளால் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டிருந்த சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகளை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வீழ்ச்சியடைந்துள்ள கைத்தொழில்துறையை மேம்படுத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி பொருளாதாரத்தை விரிவுப்படுத்துவதும், அதன் உச்சபயனை மக்களுக்கு வழங்குவதும் அரசாங்கத்தின் பிரதான இலக்காகும்.
ஏற்றுமதி பொருளாதாரத்தின் ஊடாக கடந்த ஆண்டு 16 பில்லியன் டொலர் வருவாய் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 19 பில்லியன் டொலரையும், 2030 ஆம் ஆண்டு 28 பில்லியன் டொலரையும் வருவாயாக பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதற்கு சகல பிரதேச செயலக பிரிவுகள் ஊடாகவும் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிதியியல் ரீதியில் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் துறைசார் தரப்புகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி தொடர்பில் குறிப்பிடப்பட்டது. சம்மி சில்வாவின் நிதிக்கு நாங்கள் அன்றும் அடிபணியவில்லை. இன்றும் அடிபணியவில்லை. என்றும் அடிபணிய போவதில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதி சபாநாயகராக பதவி வகித்த திலங்க சுமதிபால கிரிக்கெட் நிர்வாக சபையின் தலைவராக பதவி வகித்தார்.
உயரிய பதவியை வகித்துக் கொண்டு திலங்க சுமதிபால தலைவராக பதவி வகித்த போது அவரை நான் குழுவுக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்டேன்.இதனை அனைவரும் நன்கு அறிவார்கள். ஆகவே பொறுப்பில் இருந்த போது நாங்கள் முறையாகவே செயற்பட்டுள்ளோம். கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM