ரஸ்யாஉக்ரைன் யுத்தநிறுத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக ரஸ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியாவை
ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆராய்ந்து வருகின்றார்.
அமெரிக்க ஜனாதிபதியும் ரஸ்ய ஜனாதிபதியும் 30 நாள் யுத்த நிறுத்தம் குறித்து தொலைபேசி மூலம் பேச்சுகளில் ஈடுபடுபடவிருந்த நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களிற்கு முன்னர் விமானத்தில் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் டிரம்ப் பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சொத்துக்களை பிரிப்பது குறித்து ஏற்கனவே பேசியுள்ளனர்,நான் காணி மற்றும் வலுசக்தி திட்டங்கள் குறித்து புட்டினினுடன் பேசுவேன் என குறிப்பிட்டிருந்தார்.
2014 பெப்ரவரியில் கிரிமியாவை ரஸ்யா ஆக்கிரமித்தது.
எனினும் அது தனது பகுதி என ரஸ்யா தெரிவிப்பதை உலகஒழுங்கு நிராகரித்துள்ளது.
யுத்த நிறுத்த முயற்சிகள் வெற்றியடையவேண்டும் என்றால் உக்ரைன் தனது பகுதிகள் சிலவற்றை விட்டுக்கொடுப்பது உட்பட விட்டுக்கொடுப்புகளை செய்ய தயாராகயிருக்கவேண்டும் என அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM