சுகாதார நிபுணர்களின் சம்மேளனத்தின் தீர்மானத்திற்கு அமைவாக கல்முனை பிராந்திய சுகாதாரப் பிரிவில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிலும் கடமையாற்றுகின்ற துணை வைத்திய நிபுணர்கள் திங்கட்கிழமை (17) காலை 07 மணி முதல் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தத்தினால் நோயாளர்கள் மருந்தகத்தில் குளிசைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனதோடு, எக்ஸ் ரே எடுத்தலும் இடம்பெறவில்லை. இதன் காரணமாக நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வேலைநிறுத்தத்திற்கு துணை வைத்திய நிபுணர்களின் கூட்டு சபையைச் சேர்ந்த 7 தொழிற்சங்கங்களும், இடைக்கால வைத்திய சேவைகள் கூட்டு முன்னணியைச் சேர்ந்த 11 தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM