9 மாதங்களுக்கு பின்னர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் வில்மோர் ஆகியோர் பூமியில் நாளை புதன்கிழமை (19) கால்பதிக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் இருந்து, குரு டிராகன் விண்கலத்துக்கு சென்றனர். குரு டிராகன் விண்கலம், நேற்று இரவு 10.45 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) விண்வெளி நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. அந்த விண்கலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், வானிலை சீராக இருந்தால் குரு டிராகன் விண்கலம் இன்று மாலை புளோரிடா கடல் பகுதியை வந்தடையும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் 9 மாதங்களுக்கு பின்னர் சுனிதா வில்லியம்ஸ் பூமியில் கால் பதிக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் நான்கு நிலைகளை கடந்து பூமிக்கு வர வேண்டும். இவற்றில் முதல் நிலையில் விண்கலம் தயாராதல் நடைபெறும். இதன்பின்னர் 2 மணிநேரம் கழித்து, 2-ம் நிலையின்படி விண்கலம் பிரிதல் நடைபெறும். 3-ம் நிலையில் விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையின் உயரம் குறைத்தல் பணி நடைபெறும். இதனால், பூமிக்கு திரும்பும் பணி எளிமையடையும்.
இதனை தொடர்ந்து, 4-ம் நிலையில் விண்வெளி வீரர்கள் தரை இறங்குதல் நடைபெறும். இதன்படி, அவர்கள் நாளை புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம், அந்த நாட்டின் விண்வெளி அமைப்பான நாசா உடன் இணைந்து போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த புதிய விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் திகதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.
இருவரும் 10 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற டிரம்ப் அரசின் முயற்சியால், விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா அமைப்பு இணைந்து ரொக்கெட் ஒன்றை அனுப்பியது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் என்ற விண்கலத்துடன் பால்கன் 9 ரக ரொக்கெட் ஒன்று கடந்த 15 ஆம் திகதி அதிகாலை புறப்பட்டுச் சென்றது.
எனினும், திட்டமிட்ட நேரத்திற்கு பதிலாக 10 மணிநேர காலதாமதத்துடன், கடந்த 16 ஆம் திகதி காலை 9.40 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்கலம் சென்றடைந்தது. அந்த விண்கலத்தில் இருந்த 4 விஞ்ஞானிகளையும் வில்லியம்ஸ் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவினர் கட்டியணைத்து வரவேற்றனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இதனால், நீண்டகாலம் விண்வெளியில் காத்திருக்கும் சுனிதா மற்றும் வில்மோர் இருவரும் பூமிக்கு திரும்புவதற்கான முக்கிய நடவடிக்கை நிறைவடையும் நிலையை அடைந்துள்ளது. அவர்கள் 2 பேரும் பால்கன் விண்கலத்தில் அமர்ந்தனர். அவர்களுடைய பயணம் தொடங்கியுள்ளது.
சுனிதா மற்றும் வில்மோர் ஆகியோரின் பயணம் - கால அட்டவணை
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்புவது எப்போது என்பது குறித்த கால அட்டவணையை நாசா வெளியிட்டுள்ளது. (கீழே இலங்கை நேரப்படி விவரங்கள் தரப்பட்டுள்ளன)
மார்ச் 18
காலை 8:15 மணி - சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் ஏனைய குழுவினர் டிராகன் விண்கலத்திற்குள் செல்வார்கள்.
காலை 10:35 மணி - டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு பிரியும் (Undocking)
மார்ச் 19
அதிகாலை 2:15 மணி - பூமிக்கு திரும்புவதற்கான பயணம் NASA+ இல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
அதிகாலை 2:41 மணி - விண்கலம் அதன் சுற்றுப்பாதையிலிருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் (நேரம் அண்ணளவாக )
அதிகாலை 3:27 மணி - விண்கலத்தின் வேகம் குறைந்து, பாரசூட்டுகள் விரிக்கப்பட்டு பாதுகாப்பாக கடலில் இறங்கும் (நேரம் அண்ணளவாக )
காலை 05:00 மணி - பூமிக்கு அவர்கள் திரும்பிய பிறகு நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திப்பார்கள்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM