காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் காரணமாக ஒரு சில மணித்தியாலங்களில் 350க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் கான் யூனிஸ், ரபா,காசாவின் தென்பகுதி,வடக்கில் உள்ள காசா நகரம்,காசாவின் மத்திய பகுதியான டெய்ர் அல் பலா உட்பட பல பகுதிகளில் இஸ்ரேல் வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் சிறுவர்கள் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\
இஸ்ரேலின் இந்ததாக்குதலை ஜனவரி 19ம் திகதி யுத்தநிறுத்த உடன்படிக்கையை ஒரு தலைப்பட்சமாக கைவிடும் நடவடிக்கை என கருதுவதாக ஹமாஸ்அமைப்பு தெரிவித்துள்ளது.
யுத்தநிறுத்த உடன்படிக்கையை செயல் இழக்கச்செய்யும் நடவடிக்கைகளில் நெட்டன்யாகுவும் அவரது அரசாங்கமும் ஈடுபட்டுள்ளது என தெரிவித்துள்ள ஹமாஸ் இதன் மூலம் காசாவில் உள்ள கைதிகளை என்னவென்று தெரியாத தலைவிதியை நோக்கி தள்ளுகின்றது என குறிப்பிட்டுள்ளது.
அராபிய இஸ்லாமிய நாடுகளின் மக்களும் உலகின் சுதந்திரமான நாடுகளின் மக்களும் இந்த தாக்குதலிற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கவேண்டும் என ஹமாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்ய மறுத்ததுடன் இஸ்ரேலின் யுத்த நிறுத்த நீடிப்பை ஏற்கமறுத்ததை தொடர்ந்தே கடுமையான இராணுவநடவடிக்கையை எடுக்குமாறு தான் உத்தரவிட்டதாக இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இனி இஸ்ரேல் ஹமாசிற்கு எதிராக முழுமையான பலத்துடன் செயற்படும் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் வெள்ளை மாளிகையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM