இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளிற்கு அனுரகுமார திசநாயக்க அரசாங்கத்தை வலுவான முறையில் எதிர்கொள்வதற்கும் , தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்கும் நாடாளுமன்றத்தில் ஒன்றுபடுவதை தவிரவேறு வழியில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இலங்கையின் 225 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களுடன் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அறுதிப்பெரும்பான்மையை கொண்டுள்ளது.
2024 நவம்பர் நாடாளுமன்ற தேர்தலில் வடக்குகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தை ,தவிர ஏனைய மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் உட்பட தங்களின் போட்டியாளர்களை விட தேசிய மக்கள் சக்தி சிறந்த வெற்றியை பெற்றது.இலங்கையின் சிறுபான்மையினத்தவர்களின் வாக்களிக்கும் போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
தமிழ் கட்சிகளின் முன்னால் உள்ள சவால்கள் குறித்து இந்துவிடம் கருத்து தெரிவித்த தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு தலைமை தாங்கும் அகில இலங்கை தமிழ்காங்கிரஸின் பொதுச்செயலாளர் பொன்னம்பலம்.' எங்கள் கட்சி உட்பட அனைத்து தமிழ் கட்சிகளிற்கும் தமிழ் மக்கள் ஒரு பாடத்தை கற்பிக்க விரும்பினார்கள், அதன் காணமாக எங்களின் வாக்குகள் அரைவாசியாக குறைந்தன" என தெரிவித்தார்.
அகிலஇலங்கை தமிழ் காங்கிரஸின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான ,சட்டத்தரணியாகயிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக மாறிய இவர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் முக்கிய குரலாக ஒலிக்கின்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளிற்கு ஏற்பட்ட நிலைக்கு அரசியல் ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்துள்ளனர்.மிகவும் பிளவுபட்ட தமிழ் கட்சிகள், பொருளாதார ரீதியில் தாங்கள் பின்தங்கியுள்ள நிலைமையை தமிழ் அரசியல் தலைமைத்துவம் அலட்சியம் செய்தமை குறித்து தமிழ் வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்ட விரக்தி,2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த போதிலும் தரமான முன்னேற்றம் இன்மை குறித்த பரந்துபட்ட அதிருப்தி என பல காரணங்களை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.
யுத்தகாலத்தில் இடம்பெற்ற விடயங்களிற்கான பொறுப்புக்கூறல்,அரசியல் தீர்வு ,அர்த்தபூர்வமான பொருளாதார முன்னேற்றம் போன்றவை இன்னமும் சாத்தியப்படாத விடயங்களாகவே உள்ளன.
பல வாக்காளர்கள் அனுரகுமார திசநாயக்க குறித்து நம்பிக்கை வைத்தனர்.
பின்னடைவுக்கான காரணங்கள்
எனினும் தமிழ் அரசியல் கட்சிகளின் பின்னடைவிற்கு தமிழ்தேசிய அரசியலில் ஏற்பட்ட தேய்மானமே காரணம் என்பது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மதிப்பீடாக காணப்படுகின்றது.
'உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010 முதல், குறிப்பாக 2015 ம் ஆண்டின் பின்னர், தேர்தலின் போது தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களிற்கு வழங்கிய தமிழ் தேசிய உத்தரவாதங்களிற்கும், அவர்களின் செயற்பாடுகள் ,நடவடிக்கைகளிற்கும் இடையில் பெரும் இடைவெளி காணப்பட்டது'என அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்த பெரிய கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பினை சிறிசேன ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் ( 2015- முதல் 2019) வரை பயன்படுத்திக்கொண்டது என்பத கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்தாக உள்ளது.
மறைந்த தலைவர் ஆர் சம்பந்தனினால் தலைமை தாங்கப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு அப்போதைய மைத்திரிபாலசிறிசேன அரசாங்கத்துடன் நெருக்கமான ஈடுபாட்டை பேண முயற்சித்தது.குறிப்பாக புதிய அரசமைப்பு தொடர்பான யோசனைகளில்.
எனினும் அவ்வேளையில் கூட ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பிற்குள் செயற்பட தயாராகயிருப்பதற்காக தனது அரசியல் போட்டிக்கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பையும்,அதில் அங்கம் வகித்த இலங்கை தமிழரசுக்கட்சியையும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி மிகக்கடுமையாக விமர்சித்து வந்தது.
எனினும் தாங்கள் சமஸ்டியை அடிப்படையாக கொண்டதீர்வையே வலியுறுத்துவதாக இலங்கைதமிழரசுக்கட்சி தெரிவித்து வந்தது.
ஜேவிபியின் கடந்தகாலம் குறித்து தீவிரமான கடும் கருத்துக்களை கொண்டுள்ள போதிலும,; 2019 இல் பரந்துபட்ட தேசிய மக்கள் சக்தி கூட்டணியை உருவாக்கிய பின்னர் அந்த கட்சி தன்னை முன்னிறுத்திக்கொண்ட விதத்தில் பாரிய வித்தியாசத்தை காணமுடிவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கின்றார்.
' இனவாதமே எங்கள் நாட்டில் பிரதான பிரச்சினை என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க சரியாக தெரிவிக்கின்றார். அவர் அதனை முற்றாக இல்லாமல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்,இது வரவேற்கத்தக்கது ஆனால் எங்களிற்கு உண்மையான மாற்றங்களை காண்பியுங்கள் " என கஜேந்திரகுமார் தெரிவிக்கின்றார்.
கட்டமைப்பு மாற்றங்கள் இன்றி ஆழமாக வேரூன்றிய இனவாதம் உடனடியாக போகாது என தெரிவிக்கும் அவர் ஒற்றையாட்சி நாடு என்ற நிலை மாறவேண்டும், அரசாங்கம் அதிகாரங்களை பகிரவேண்டும், அனைத்து இலங்கையர்கள் குறித்தும் நேர்மையாகயிருக்கவேண்டும்,அதேவேளை சமஸ்டி என்பது பயங்கரவாதம் இல்லை என அவர்களிற்கு உத்தரவாதத்தை வழங்கவேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM