யாழ். குருநகரைச் சேர்ந்த காணாமல்போன மீனவர்களை தேடும் நடவடிக்கை துரித கதியில் 

Published By: Digital Desk 7

18 Mar, 2025 | 12:19 PM
image

கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மீனவர்கள் காணாமல்போயுள்ள விடயம் தொடர்பில் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள பிரதானிகளுடன் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

மீனவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையை உடன் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கினார். இதற்கமைய தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ், 54 வயதுடைய பூலோகதாசன் ஆகியோரே கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்துறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்...

2026-05-20 15:26:54
news-image

உலக சுகாதார மாநாட்டில் முக்கிய சந்திப்புகள்:...

2026-05-20 15:11:17
news-image

சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து...

2026-05-20 15:22:19
news-image

திருகோணமலை - கண்டி வீதியில் வாகன...

2026-05-20 14:53:21
news-image

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிக்குடியில் விசாரணைகள்...

2026-05-20 14:14:27
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2026-05-20 13:48:40
news-image

மூதூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் மீனவர்களின்...

2026-05-20 13:32:51
news-image

நாளை பாராளுமன்றத்தில் பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு...

2026-05-20 13:12:04
news-image

கச்சத்தீவு மீட்பு விடயத்தை தேர்தல் கால...

2026-05-20 12:28:10
news-image

பொகவந்தலாவையில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதி...

2026-05-20 12:44:06
news-image

மாகாண அரசாங்க பிரதான குற்றப்பகர்வு அலுவலகங்களை...

2026-05-20 14:51:02
news-image

“பாடசாலை அதிபரை மாற்றவேண்டாம்” - யாழ்....

2026-05-20 12:46:00