இலங்கையின் முன்னணிநிதிச் சேவை வழங்குநரான மக்கள் வங்கி, 2024 டிசம்பர் 31,அன்று முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதியியல் முடிவுகளை இன்று அறிவித்தது,மொத்த ஒருங்கிணைந்த செயற்பாட்டுவருமானம் 145.1 பில்லியன் மற்றும் வரிக்குப் பிந்தைய இலாபம் 28.8 பில்லியன் ரூபாய் எனப் பதிவுசெய்துள்ளது, இது முறையே 49.9% மற்றும் 152.7% வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இதில் சர்வதேச இறையாண்மை பத்திரமறுசீரமைப்பிலிருந்து உருவான நன்மையும் அடங்கும், இது ஏனைய சகாக்களுடன் ஒப்பிடும்போது மிகவும் மிதமானது ஆகும்.
ஒருங்கிணைந்த நிகரவட்டி வருமானம் 122.9 பில்லியனாக உயர்ந்தது. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 67.8 பில்லியனாக இருந்து மாறிவரும் சந்தை வட்டி விகிதங்களுக்கு ஏற்ப சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் சரியான நேரத்தில் விலை நிர்ணயம் செய்வதை பிரதிபலிக்கிறது. இதன் விளைவாக, ஒருங்கிணைந்த நிகரவட்டி வரம்புகள் 2023 இல் 2.1% ஆக இருந்த நிலையில், 2024 இல் 3.7% ஆக அதுமேம்பட்டது. ஒருங்கிணைந்த நிகர கட்டணங்கள் மற்றும் தரகுகள் ஆண்டிற்கு 15.3 பில்லியனாக இருந்தன. இது 10.5% வளர்ச்சியைக் குறிக்கிறது - இது குழுவின் எல்லாநேரத்திலும் உயர்ந்தஅளவாகும். மொத்த ஒருங்கிணைந்த செயற்பாட்டுச் செலவுகள் 75.7 பில்லியனாக இருந்தது (2023: 62.2 பில்லியன்).
மொத்த ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் வைப்புத்தொகை 2,947.9 பில்லியனை எட்டியது (2023 இறுதியில்: 2,745.2 பில்லியன்). நிகரகடன்கள் 1,665.0 பில்லியனாக இருந்தன (2023 இறுதியில்: 1,823.8 பில்லியன்); இது அரசாங்க ஆதரவு பெற்ற அரசு நிறுவனத்திற்கு திறைசேரிப்பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட 262.6 பில்லியன் கடன்களைத் தீர்த்தபின்னராகும். கூறப்பட்டதீர்வைத் தவிர்த்து,நிகரகடன் வளர்ச்சி 5.7% ஐ நெருங்குகிறது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த ஒருங்கிணைந்த சொத்துக்கள் 3,471.7 பில்லியனைஎட்டின (2023 ஆம் ஆண்டின் இறுதியில்: 3,208.2 பில்லியன்).
முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த வங்கியின் தலைமைநிர்வாகஅதிகாரி / பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா,
“எதிர்பாராத சவால்களுக்கு மத்தியில்,எங்கள் குழு மீண்டும் ஒருமுறை சிறந்து விளங்குவதற்கான தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. நாங்கள் அடைந்துள்ள முடிவுகள் நிறுவனத்தின் வரலாற்றில் மிகஉயர்ந்தவை மட்டுமல்ல,வழியில் நாங்கள் பலதடைகளை சந்தித்த போதிலும, அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைவதற்கான எங்கள் திறனுக்கான சான்றாகும்.எங்கள் நிலையைப் பாதுகாக்கும் மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் நீடித்த,நேர்மறையான தாக்கத்தை உருவாக்கும் என்ற எங்கள் நம்பிக்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM