இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கும் 67 பயங்கரவாத அமைப்புகள் மற்றும் சட்டவிரோத குழுக்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை மத்திய உள்துறை அமைச்கம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் யுஏபிஏ பிரிவு 35-ன் கீழ் அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்ட 45 தீவிரவாத அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இவை அந்த சட்டத்தின் முதல் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 22 தீவிரவாத குழுக்கள் யுஏபிஏ பிரிவு 3 (1)-ன் கீழ் சட்டவிரோத குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பல அமைப்புகள் இந்தியா முழுவதும் பிரிவினைவாதம் மற்றும் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டவை.
இந்தியாவில் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்துவதற்காக அந்த அமைப்புகளின் சொத்துகளை முடக்குவது அதன் உறுப்பினர்களை கைது செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் ( இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் பப்பர் கல்சா இண்டர்நேஷனல் காலிஸ்தான் கமாண்டோ படை காலிஸ்தான் ஜிந்தாபாத் படை சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு லஷ்கர்--தொய்பா ஜெய்ஷ்--முகமது மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி ஹர்கத்-உல்-முஜாகிதீன் ஹிஸ்புல்-முஜாகிதீன் ஜம்மு-காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அசாம் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி மக்கள் விடுதலை ராணும் (பிஎல்ஏ) காங்லீபாக் கம்யூனிஷ்ட் மணிப்பூர் விடுதலை முன்னணிதிரிபுரா தேசிய விடுதலை முன்னணி அல்-காய்தா உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இதேபோன்றுஇ சட்டவிரோத குழுக்களாக இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்பா) நாகாலாந்து சோசலிச கவுன்சில் முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர் (மஸ்ரத் ஆலம் பிரிவு) பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்டவை தடைப்பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM