(எம்.மனோசித்ரா)
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் இலங்கை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கண்டியில் தராசு சின்னத்திலும் கொழும்பு மற்றும் புத்தளத்தில் மர சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16) புத்தளம் - கற்பிட்டி நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ரவுப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை தேர்தல் விதிமுறைகளில் காணப்படும் குளறுபடிகள் காரணமாக, குறிப்பாக பல அங்கத்தவர் தொகுதிகளில் ஒரு வாக்கு அதிகமாகக் காணப்பட்டாலும் அனைத்து ஆசனங்களும் அந்த கட்சிக்கே உரித்தாகக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே அந்தந்த தொகுதிகளிலுள்ள இன விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழரசு கட்சியும் நாமும் கலந்தாலோசித்து சில இடங்களில் அவர்கள் சார்பில் தமிழ் வேட்பாளர்களையும், எம் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களையும் அவர்களது சின்னத்திலேயே களமிறக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அந்தந்த தொகுதிகளில் எமக்கு கிடைக்கக் கூடிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதே இந்த உடன்பாட்டின் உண்மையான நோக்கமாகும். தமிழரசு கட்சிக்கு அந்தந்த தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கான ஆதரவையும் வழங்குவோம். புத்தளம் நகரசபையிலும் மாநகசபையிலும், கொழும்பு, கண்டி மாநகரசபைகளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் போட்டியிடவுள்ளது. கண்டி மாநகரசபையில் தராசு சின்னத்தில் களமிறங்கவுள்ளோம்.
கொழும்பு மாநகரசபையில் கட்சியின் சொந்த சின்னமான மர சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். அதேபோன்று புத்தளத்திலும் மர சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM