(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்து பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான சிறந்த வாய்ப்பு தோற்றம் பெற்றுள்ளது. ஆகவே காலம் தாழ்த்தாது யாப்புருவாக்க பணிகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற அமர்வின் போது் புதிய அரசியலமைப்பு தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி பெரேராவினால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஜனாதிபதி முறைமை ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதற்கு பெரும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.
1978 இல் உருவாக்கப்பட்ட இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை் தனக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அதனை இரத்துச் செய்வதாக முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா குறிப்பிட்டிருந்தார்.ஆனால் அவரால் முடியவில்லை.
2000ஆம் ஆண்டுக்குள் நாங்கள் சிறந்த அரசியலமைப்பை உருவாக்கினாலும் அதனை நிறைவேற்ற முடியவில்லை.
இதன்பின்னர் மஹிந்த ராஜபக்ஷ இதுபற்றி கதைத்தாலும் அதனை செய்யவில்லை.
2015ஆம் ஆண்டில் மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் இது தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். தனது அதிகாரத்தை குறைத்துக்கொண்டவராக மைத்திரிபால சிறிசேன இருந்தார். இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் புதிய அரசியலமைப்பை மறுசீரமைப்பை விரைவில் செய்வோம் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் வந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. பலமான அரசாங்கம் இருக்கும் நேரத்திலேயே இவ்வாறான வேலைகளை செய்ய முடியும். இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. இதன்படி இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும்.
இதனால் தயவு செய்து இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு கோருகின்றோம். தற்போதுள்ள அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்கள் உள்ளன.
தோல்வியடைந்தவர்கள் கூட பாராளுமன்றத்திற்கு வரக்கூடியவாறு உள்ளது. இது தொடர்பான சட்டம் தவறானது. பட்டியலில் உள்ளவர்களை தவிர வெளியார் உறுப்பினராக வர முடியாது என்று குறிப்பிடப்பட்ட போதும் பிற்பட்ட காலத்தில் அதற்குள் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
இப்போது தோல்வியடைந்தவர்களும் தேசியப் பட்டியலில் வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட குறித்த திருத்தம் முறையாக நிறைவேற்றப்படவில்லை.
அவ்வாறான ஒன்றே இப்போதும் பின்பற்றப்படுகின்றது. இதனை மாற்ற வேண்டும். நீங்கள் ஆரம்பியுங்கள். அரசியலமைப்பு பேரவையை அமைத்து இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM