(எம்.வை.எம்.சியாம்)
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி உறவுமுறை சகோதரர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெஹெரகொடெல்ல பகுதியில் 21 மற்றும் 22 வயதுடைய உறவுமுறை சகோதரர்கள் இருவர் கொல்லப்பட்டிருந்தனர். முச்சக்கரவண்டியொன்று தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நவலோகபுர சேதவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர்கள் இருவரும் கிரான்பாட்ஸ் வெஹெரகொடெல்ல பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்காக மற்றுமொரு தரப்பினருடன் இணைந்து சென்றிருந்த போது ஏற்பட்ட முரண்பாட்டினால் இந்தக்கொலைச்சம்பவம் பதிவாகியிருந்தது.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் இந்த இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 முதல் 44 வயதுடைகளுடைவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக்கூறப்படும் 2 கத்திகள் மற்றும் கைத்தொலைபேசிகள் என்பனவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிரான்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM