(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தை அடுத்த அரசாங்கத்துக்கு பொறுப்பாக்க கூடாது. பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் சமூகத்தினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
மகளிர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் திட்டமிட்ட வகையில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் சபை முதல்வர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். நான் கடந்த 25 ஆண்டுகாலமாக பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறேன்.
நன்மை செய்தாலும் விமர்சிப்பார்கள், தீங்கு செய்தாலும் விமர்சிப்பார்கள். பாராளுமன்றத்துக்கு வந்து விட்டால் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மகளிர் விவகார அமைச்சர் எடுக்கும் தீர்மானங்கள் எந்த இனத்துக்கும், மதத்துக்கும் பாதகமாக அமைய கூடாது என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
இலங்கையில் மூவன மக்களும் வாழ்கிறார்கள். அனைத்து இனத்தவர்களின் மத சுதந்திரங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் இலங்கையர் என்ற அபிமானம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் .இதற்கு அரசாங்கம் விசேட திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் இடம்பெற்று எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதியுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த மிலேட்சமான தாக்குதலால் 269 பேர் கொல்லப்பட்டார்கள். 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்து பலர் இன்றும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையான சூத்திரதாரியை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கத்தோலிக்க சபை தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது. 2020 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எமது அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.இருப்பினும் நோக்கம் வலியுறுத்தப்படவில்லை.
கத்தோலிக்கர்களில் 99 சதவீதமானோர் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளார்கள். குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு நீதி கிடைக்கும், பிரதான சூத்திரதாரி பகிரங்கப்படுத்தப்படுவார் என்று கத்தோலிக்க மக்கள் இன்றும் எதிர்பார்த்துள்ளார்கள்.
குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி வரை பார்த்துக்கொண்டிருப்பதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்காவிடின் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குண்டுத் தாக்குதல் சம்பவத்தால் கத்தோலிக்கர்கள் மாத்திரமல்ல, முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள். முஸ்லிம் சமூகத்தினர் வீதிக்கு இறங்க முடியாத நிலை காணப்பட்டது. அனைத்து முஸ்லிம்களும் குண்டுத்தாக்குதல்தாரிகளை போன்று தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டார்கள். ஆகவே இவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்.
குண்டுத்தாக்குதல் விவகாரத்தின் உண்மையை இந்த அரசாங்கம் வெளிக்கொண்டு வர வேண்டும்.அடுத்த அரசாங்கத்துக்கு இதனை பொறுப்பாக்க கூடாது. மிலேட்சத்தனமான தாக்குதலை நடத்திய பிரதான சூத்திரதாரியை பகிரங்கப்படுத்தி கடுமையான தண்டனை வழங்குங்கள் அதற்கு நாங்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM