பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொலைகள் சித்திரவதைகளிற்குசரியான தண்டனைகளை வழங்கவேண்டும் ; தமிழ் முஸ்லீம் மக்களிற்கும் இதுபோன்று நீதியை நிலைநாட்டவேண்டும் - ரஜீவ்காந்

Published By: Rajeeban

17 Mar, 2025 | 05:33 PM
image

பட்டலந்தவில் ஆர்வம் காட்டும் ஜேவிபியினர் ஏனைய விடயங்களிலும் இதே ஆர்வத்தை காட்டவேண்டும்இஏனைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் வேண்டுகோள் விடுத்துள்ளார்

செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும்தெரிவித்துள்ளதாவது.

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று நாட்டில் பேசுபொருளாக காணப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பாகவும் பின்னர் அந்த அறிக்கையை தான் நிராகரிப்பது தொடர்பாகவும் ரணில்விக்கிரமசிங்க நாட்டு மக்களிற்கு அறிவித்திருக்கின்றார்.

இந்த பட்டலந்த வதை முகாமின் கொலைகள் - ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பான அந்த அறிக்கை சந்திரிகாவின் காலத்தில் தயார் செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படாமலே இருந்தது.

பின்னர் ரணில்விக்கிரமசிங்க அல்ஜசீராவின் கேள்விகளிற்கு பதிலளிக்க முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டதன் பிற்பாடு இது நாட்டில் மீண்டும் பேசுபொருளாக மாறியது.

இது பேசுபொருளான பின்னர்தான் ஜேவிபி அரசிற்கு இவ்வாறானதொரு அறிக்கை இருக்கின்றது அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்ற நினைப்பு வந்தது.

ரணில்விக்கிரமசிங்க இந்த அறிக்கையை தான் நிராகரிப்பதாக அதனை ஏற்றுக்கொள்ள முடியாதுஎன தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் பீரிசிற்கு இந்த கொலைகளிற்காக வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் போலி கடவுச்சீட்டுகள் பற்றி உங்களிற்கு தெரியும்.இவை அனைத்திற்கும் பின்னால் ரணி;ல்விக்கிரமசிங்கவின் ஆதரவு உள்ளதாகபல குற்றச்சாட்டுகள் உள்ளன.

எனவே இந்த கொலை சந்தேகநபராகயிருக்ககூடிய அரசாங்க பின்புலத்திலே அரசபொலிஸ் சேவையை சேர்ந்த டக்ளஸ் பீரிஸ் முதலாவது சாட்சியாக உள்ள இந்த இடத்திலேஇகைத்தொழில்பேட்டையில் உள்ள வீடமைப்பு திட்டத்திற்கும் அங்கிருந்த வீடுகள் சிலவற்றிற்கும்ரணில் விக்கிரமசிங்க பொறுப்பாகயிருந்துள்ளார் என பட்டலந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அந்த பொறுப்பையும் ரணில்விக்கிரமசிங்க இன்று தட்டிக்கழிக்கின்றார்.தான் ஒருசாட்சியாகவே அழைக்கப்பட்டதாக அவர் பொய் கூறுகின்றார் அவர் சாட்சி இல்லைஇகுற்றவாளியாகத்தான் தொடர்ந்தும் அறிக்கையில் உரைக்கப்படுகின்றார்.

பட்டலந்தவின் வதைமுகாம் தொடர்பான பிரதான புகைப்படமாக இருப்பது டக்ளஸ் பீரிசின் இரு புதல்வர்களும்இபாதிக்கப்பட்ட கொடுரத்திற்கு உட்பட்ட.சித்திரவதைக்குள்ளான நபருக்கு அருகில் துப்பாக்கிகளுடன் இருக்கும் படம். இந்த படம் பல விடயங்களை எங்களிற்கு சுட்டிக்காட்டுகின்றது.

எனவே டக்ளஸ் பீரிசின்குடும்பம் அந்த காலப்பகுதியில் 18 வயதை கூட அடையாத இரண்டு மகன்மாரும் இந்த சித்திரவதையில் பங்கெடுத்திருப்பதுஅவர்கள் குடும்பமாக  ஏனைய மனிதர்களை கொலை செய்து சித்திரவதை செய்து ஆனந்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இது அவரது மகனின் மற்றுமொரு புகைப்படம்அவரிடம் ஆயுதம் எப்படி வந்தது என்பது தெரியாது  இந்த படங்களில் உள்ளவர்கள்தான் டக்ளஸ்பீரிசின் மகன்மார் என்பதுஅவர்களின் இந்த குடும்ப புகைப்படம் மூலம் தெளிவாகின்றது.

 எனவே இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து ரணில் விக்கிரமசிங்க வெறுமனே வார்த்தை  ஜாலங்களை பயன்படுத்தி தப்பிக்க முடியாது. இந்த குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மைரணில்விக்கிரமசிங்க இந்த பாரிய உரிமை மீறல்களிற்கு பின்னால் இருந்ததன்மை எல்லாம் நாங்கள் நன்கறிவோம்.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப சரியான தண்டனைகளை மனிதர்களை கொலை செய்த குற்றத்திற்காக துன்புறுத்திய சித்திரவதை செய்த குற்றத்திற்காக இவர்களிற்கு வழங்கியே ஆகவேண்டும்.

இதற்கு அப்பால் சென்று இன்னுமொரு விடயத்தை  நாங்கள் ஆழமாக சிந்திககப்போனால்இஇந்தநாட்டில் பட்டலந்தை  என்ற சித்திரவதை முகாம் மாத்திரம்தான் இருந்ததா? பட்டலந்தையை தவிர சித்திரவதைகள் இடம்பெறவில்லையா?பட்டலந்தவை தவிரவேறு கொலைகள் இந்த நாட்டில் இடம்பெறவில்லையா? இடம்பெற்றிருக்கின்றது.

குறிப்பாக தமிழ் மக்களிற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் அரச ஆதரவுடன்1983 இல் இடம்பெற்ற கலவரம்வெலிக்கடையில் இடம்பெற்ற சிறைச்சாலை கொலைதிருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலைதிருகோணமலையில் இடம்பெற்ற 17 தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் கொலைசெஞ்சோலையில் இடம்பெற்ற அப்பாவிசிறுவர்களின் கொலைஅதன் பின்னர் இறுதி யுத்தத்திலே சரணடைந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நிலைஇசைப்பிரியா உட்பட பல பெண்கள் சிரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதுசெம்மணிபுதைகுழி தொடர்பான நிலைமை.இன்று கண்டுபிடிக்கப்பட்ட கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான நிலைமை.

இவை அனைத்திற்கும் இலங்கையின் முப்படை தளபதிகளாகயிருந்த ஜனாதிபதிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை இங்குஇருக்கின்றது.

இவைஅனைத்திற்கும் ஆணைக்குழுக்கள்இருக்கின்றனவா என்பது தெரியாது சிலவற்றிற்கு ஆணைக்குழுக்களை நியமித்திருந்தார்கள் அவற்றின் அறிக்கை எங்கே என்று தெரியாது.

எனவே பட்டலந்த அறிக்கையை சமர்ப்பிப்பது போல ஏனைய கொலைகள் போன்றவற்றிற்கும் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது.

அதுபோல முஸ்லீம்கள் தொடர்பாக ஏற்பட்ட கலவரங்கள் அளுத்கம திகன உள்ளன.

பட்டலந்தவில் ஆர்வம் காட்டும் ஜேவிபியினர் ஏனைய விடயங்களிலும் இதே ஆர்வத்தை காட்டவேண்டும்இஏனைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.

ரணில்விக்கிரமசிங்கவிற்கு தண்டனைபெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் இதனை செய்வார்கள் என்றால் ஏனைய கொலைகளிற்கும் நீதி வழங்கப்படவேண்டும்இ

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான நீதியாகட்டும் காணாமல் போனவர்களிற்கான நீதியாகட்டும் மக்கள் இன்றுவரை போராடிக்கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

நீண்டகாலத்திற்கு முன்னர் இடம்பெற்ற விடயம் இன்று பேசுபொருளாகி நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது நாங்கள் இதற்கு ஆதரவுதான் .

ஒரு கொலை நடந்திருக்கின்றது ஒரு அறிக்கை இருக்கின்றதுஅந்த அறிக்கையை மையமாக வைத்து ரணில்விக்கிரமசிங்கவிற்கு தண்டனை வழங்குவார்கள் என்றால் அதற்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம் எந்த அடிப்படையில் என்று சொன்னால்இந்த ஆணைக்குழுவின் அறிக்கைமுதலாவது படியாக ஏனைய பிரச்சினைகளிற்கும் இதேபோன்ற நீதியை வழங்குவார்களாகயிருந்தால்இந்த அறிக்கைகக்கான பூரணமான ஆதரவு எம்மத்தியில் இருக்கும்.

நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு எதனையும் செய்ய முடியாது இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படவேண்டுமாகயிருந்தால் அனைத்து விடயங்களிற்கும்ஒரே மாதிரியான நீதியை நிலைநாட்டவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48