( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசாங்கம் இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களின் மனங்களை வருத்தும் வகையில் செயற்படாது என்று நம்புகிறோம். பௌத்த மதத்துக்கு வழங்கும் அந்தஸ்த்தை இந்து மதத்துக்கும், ஏனைய மதங்களுக்கும் வழங்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வரலாற்று தொன்மைமிக்க ஆலயங்களை புனரமைக்க விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையத்தம்பி ஸ்ரீநாத் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
மத மற்றும் இன சுதந்திரத்தை உறுதிப்படுத்தினால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய முடியும். நாட்டின் பொருளாதார ஸ்தீரத்தன்மை குறித்து ஆராயப்படுகிறது. இந்த அமைச்சுக்கு 13 ஆயிரம் மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய அரசாங்கம் பயணிக்கிறது. இருப்பினும் நடப்பு சம்பவங்கள் ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு எதிர்மறையானதாக அமைந்துள்ளது.
சிறுபான்மை மக்களின் மனங்களை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் தற்போதும் முன்னெடுக்கப்படுகிறது. பாரம்பரியமான தொன்மையை கொண்டுள்ள இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் மற்றும் பௌத்தம் ஆகிய மதங்கள் சமனிலையான முறையில் பார்க்கப்பட வேண்டும். பௌத்த மதத்துக்கு வழங்கப்படும் அந்தஸ்த்து இந்து உட்பட ஏனைய மதங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பண்டைய தொன்மையுடன் பல ஆலயங்கள் காணப்படுகின்றன. அவற்றை பேணி பாதுகாக்க வேண்டும்.இந்த ஆலயங்களை புனரமைக்க வேண்டிய பொறுப்பு புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சுக்கு உண்டு. மட்டக்களப்பு மாவட்டத்தில் தாந்தாமலை ஆலயம் தமிழர்களின் தொன்மையை பறைசாற்றி நிற்கிறது. இந்த ஆலயத்தை புனரமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களமும், அரச நிகழ்ச்சி நிரலில் உள்ள நிறுவனகங்களும் தடையாக செயற்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்த்தில் கொக்கட்டிச்சோலை, மண்டூர் முருகன் ஆலயம் உட்பட பல ஆலயங்கள் உள்ளன. இவற்றை புனரமைப்பதற்கு கடந்த காலங்களில் நிதி ஒதுக்கப்படவில்லை. அதேபோன்று 500 - 600 ஆண்டுகால பழமைவாந்த தேவாலயங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளன இவற்றை அபிவிருத்தி செய்ய கடந்த காலங்களில் நிதி ஒதுக்கப்படவில்லை.
அண்மையில் கபரனை பகுதியில் உள்ள இந்து ஆலயத்தின் முகப்பினை மறைக்கும் வகையில் பேருந்து தரிப்பிட நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது இந்துக்களின் மனங்களை பாதித்துள்ளது. இந்த அரசாங்கம் இந்து, கிருஸ்தவம் மற்றும் முஸ்லிம் மக்களின் மனங்களை வருத்தும் வகையில் செயற்படாது என்று கருதுகிறோம். இந்த முறையற்ற வகையில் செயற்பட்டவர்கள் யார் என்பதை குறிப்பிட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருந்தொகையாக குளங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் அப்பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆலயங்களை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுங்கள். தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவியுங்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM