முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் மூவரை  கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 60 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கஞ்சா போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.