யாழில் மே மாதம் கனேடிய கல்வி கண்காட்சி, முதலீட்டு வர்த்தக மாநாடு ; கனேடிய - இலங்கை வர்த்தக சம்மேளனம்

17 Mar, 2025 | 05:23 PM
image

வடக்கு பிராந்தியத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு பயனுள்ள பாதையை உருவாக்கும் நோக்கில் கனேடிய  - இலங்கை வர்த்தக சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் கனேடிய கல்வி கண்காட்சி மற்றும் யாழ்ப்பாண முதலீட்டு வர்த்தக மாநாடு ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (17) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த கனேடிய  - இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் முகமட் ஹமீட் இவ்வாறு கூறியதுடன் அது குறித்து மேலும் கூறுகையில்,

யாழ். குடா நாட்டு இளைஞர் யுவதிகளின் கல்வி மற்றும் தொழில்துறை குறித்த எதிர்கால கனவுகளை நனவாக்கிக் கொடுக்கும் வகையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

அதனடிப்படையில் குறித்த மாநாடு மே 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

குறித்த மாநாட்டில் முதலாம் நாளன்று கனடா மற்றும் பிற சந்தைகளுக்கு இலங்கை மாணவர்களை பணிக்கமர்த்தல், இலங்கையில் கனேடிய கல்வியை வழங்கல், தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை நிறுவுதல், கனடா கல்வி மற்றும் திதன் பயிற்சி உரிமையாளர்களை ஊக்குவித்தல், திறன் இடப்பெயர்வு மற்றும் வேலை வாய்ப்புக்கான பயிற்சி மற்றும் திறன்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி நடைபெறவுள்ளது.

அதேநேரம்  யாழ். வேலைவாய்ப்பு வாய்ப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் என்ற தலைப்பில் இரண்டாம் நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதில் யாழ் வேலை வாய்ப்பும் தொழிலாளர்களுக்கான சாதக நிலைகளை உருவாக்கல்.

இளைஞர்களுக்கு வேலவாய்ப்பு வழங்கல், பல நூறு படித்த பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்கல் மற்றும் வர்த்தகம் தொடர்பான மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், விவசாயம் மற்றும் மீன் வளர்ப்பு, சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான எதிர்கால திட்டங்கள் முதலீடுகளை உருவாக்குவது தொடர்பான பயிற்சிகளும் இதன்போது இடம்பெறவுள்ளது.

குறிப்பாக காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய பகுதிக்கு உருவாக்கப்பட இருக்கும் முதலீட்டு வலயங்களில் இத்தகைய வாய்ப்புக்களை அரச மற்றும் தனியார் இணைந்த கட்டமைப்பில் உருவாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

எமது இந்த நிகழ்வுக்கு இலங்கையின் பிரதமர் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள இருக்கின்றார்.

வலம்புரி விருந்தினர் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வினூடாக கனடாவிலிருந்து முதலீடுகளைக் குறிப்பாக வடபகுதிக்குக் கொண்டுவர முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளோம்.

அதுமட்டுமல்லாது இலங்கையிலிருந்து சென்று வெளிநாடுகளில் கற்று மீளவும் வரும் மாணவர்களுக்குத் தகுதிக்கேற்ப வேலைகளும் ஊக்குவிப்பு வழங்கவும் ஏற்பாடுகள் இருக்கின்றது.

அந்தவகையில் இந்த வாய்ப்பை வடக்கின் இளைஞர் யுவதிகள் சரியாகப் பயன்படுத்தி வாழ்வை வெற்றிகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27
news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00
news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20