இன்றைய சூழலில் எம்மில் பலருக்கும் ஜாதக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் துர்க்கை அம்மன் வழிபாட்டினை மேற்கொண்டால் பல சங்கடங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதுடன் அவை ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள இயலும் என ஆன்மீக நிபுணர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
எப்போதும் பிரச்சனைகளைப் பற்றி விரிவாக பேசுவதை விட பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பாகவும் பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கான வழிகளை எடுத்துரைப்பது தான் ஆன்மீக முன்னோர்களின் கடமையாகும். அந்த வகையில் அவர்கள் துர்க்கை அம்மனை பின்வரும் முறையில் வழிபட்டால் அருளும், ஆசியும் கிடைக்கும் என உறுதியாக தெரிவிக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : நுனி வாழை இலை, அரச இலை, அகல் விளக்கு, நல்லெண்ணெய் / பசு நெய் / இலுப்பை எண்ணெய், மஞ்சள் தூள், குங்குமம், பச்சை கற்பூரம்,
பிறந்த கிழமை -செவ்வாய்க்கிழமை- ஞாயிற்றுக்கிழமை -வெள்ளிக்கிழமை- ஆகிய கிழமைகளில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பூஜை அறையில் துர்க்கை அம்மனின் திருவுருவ புகைப்படத்தை வைத்து, அதற்கு பூ வைத்து அலங்காரம் செய்ய வேண்டும்.
அதற்கு முன்னால் நுனி வாழை இலையை பரப்பி, அதில் அரச இலையை வைக்க வேண்டும். அதன் மீது இரண்டு அகல் விளக்குகளை வைத்து, அதன் மீது நல்லெண்ணெய் / பசு நெய் /இலுப்பை எண்ணெய் / எனும் ஏதேனும் ஒரு எண்ணெய்யை ஊற்றி அதன் மீது பச்சை கற்பூரத்தையும் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அதனைத் தொடர்ந்து வாழை இலையில் மஞ்சள் தூளை பரவ செய்து, அதில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர் & லக்னம் ஆகியவற்றை குறிப்பிட்டு, குலதெய்வத்தின் பெயரையும் குறிப்பிட வேண்டும்.
அதன் பிறகு உங்கள் குலதெய்வத்தை வணங்கி, 'இந்த பிறவியில் எங்கள் குடும்பத்தில் எந்த சங்கடங்களும் நிகழ்காலத்திலும் , எதிர்காலத்திலும் நிகழாமல் எங்களை காத்து நல்லருள் புரிவதுடன், செல்வ வளத்துடன் வாழ வழிகாட்ட வேண்டும் ' என துர்க்கை அம்மனிடம் மனம் உருக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இந்த தருணத்தில் 108 முறை 'ஓம் தம் துர்காயே நமக' என்ற மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும். இத்தகைய பிரார்த்தனையை ஐந்து வாரங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது உங்களுடைய கோரிக்கை நடைமுறையில் நிறைவேறி உங்களது வாழ்க்கைத் தரம் உயர்வதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM