வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

Published By: Digital Desk 2

17 Mar, 2025 | 04:49 PM
image

உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதல் காரணமாக பருவ நிலையில் சமச் சீரற்ற நிலை ஏற்படுகிறது. கோடை காலம் என்றால் அதிக வெப்பமும் மழைக்காலம் என்றால் அதீத மழை பொழிவும் பனிக்காலம் என்றால் உறை பனியாகவும் மாறி மக்களை ஆரோக்கிய ரீதியாக கடும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இந்தத் தருணத்தில் கோடை காலத்தில் உண்டாகும் வெப்ப அலையை எதிர்கொள்வது குறித்து வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.

கோடை காலம் வந்துவிட்டால் எம்முடைய வீடு, அலுவலகம், விற்பனை நிலையம், தொழிற்சாலை, என அனைத்து பகுதிகளிலும் குளிர்சாதன வசதியை ஏற்படுத்திக் கொண்டு வெப்ப அலையிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வர். இந்நிலையில் எம்முடைய வீடுகளில் உள்ள குளிர்சாதன கருவியை கோடை காலத்தில் அதிகமாகவும், ஏனைய பருவ நிலைகளில் மிகக் குறைவாகவும் பாவிக்கும் பழக்கம் உண்டு.

இதன் காரணமாக குளிர்சாதன கருவியை கோடை காலத்தில் இயக்குவதற்கு முன் அதனை முழுமையாக சுத்திகரிக்க வேண்டும். அதன் பிறகு பாவிக்க வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் பயன்பாட்டில் குறைவான நிலையில் இருக்கும் குளிர்சாதன கருவியை திடீரென்று கோடை காலத்தில் இயக்கும்போது அதில் உள்ள தூசுகள், பாக்டீரியாக்கள், பூஞ்சை காளான்கள் போன்றவை குளிர்சாதன கருதியின் மூலம் வெளியாகும் காற்றின் வழியாக வெளியேறி எம்முடைய சுவாச பாதையை பாதிக்கும். அத்துடன் சளி, இருமல், மூச்சு திணறல் போன்ற பாதிப்புகளையும் உண்டாக்கும்.

வெயில் காலத்தில் வெளியில் சென்று வீட்டிற்கு வந்தவுடன் வெப்பம் தாங்காமல் குளிர்சாதன கருவியை இயக்கி, அதன் முன் நின்று கொண்டு அதிலிருந்து வீசும் சில்லென்ற காற்றை சுவாசிப்பர்.

இந்த முறை ஆரோக்கியமற்றது என்று வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். ஏனெனில் எம்முடைய உடல்நிலை 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை சமச்சீராக பராமரிக்கின்றது. மேலும் 23 டிகிரி முதல் 39 டிகிரி வரையிலான வெப்பத்தை மட்டுமே எதிர்கொள்ளக்கூடிய திறனை பெற்றிருக்கிறோம்.

கோடை காலத்தின் போது வெயிலின் அளவு 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். இந்த தருணத்தில் வெயிலில் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்குள் வரும்போது குளிர்சாதன கருவியை 18 என்ற எண்ணிக்கைக்கு கீழ் குளிர் நிலைக்கு வைத்து அறையை குளிர் மிக்கதாக ஆக்கி வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்வர்.

இதனால் உடலின் வெப்ப நிலையில் சம சீரற்ற தன்மையை ஏற்பட்டு காய்ச்சல் , கை கால் நடுக்கம் உள்ளிட்ட சுகவீனங்கள் ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் கோடை காலத்தில் குளிர்சாதன கருவியின் பாவனையை அதிகரித்துக் கொள்வதை விட, அதனை ஆரோக்கியத்திற்கு எந்த ஊறு விளைவிக்காமல் பாவிப்பது எப்படி? என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்துகிறார்கள்.

வைத்தியர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் அருந்துங்கள்…!

2025-04-21 13:10:31
news-image

மண்ணீரல் நரம்பு மறு சீரமைப்பு சிகிச்சை

2025-04-19 17:32:59
news-image

நீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுகள்

2025-04-19 15:47:07
news-image

பெரியனல் அப்ஸெஸ் : ஆசனவாயில் ஏற்படும்...

2025-04-18 18:33:58
news-image

பூஞ்சைகளை நுகர்வதால் ஆரோக்கியம் கெடலாம்

2025-04-18 17:44:44
news-image

தர்பூசணி விதையில் இவ்வளவு நன்மைகள் ஒளிந்திருக்கா?

2025-04-18 12:47:04
news-image

ஹைப்பர்ஸ்ப்ளெனிசம் எனும் மண்ணீரலில் ஏற்படும் பாதிப்பை...

2025-04-18 10:51:51
news-image

சிசேரியனுக்கு பின்னராக முதுகு வலி தீர்வு...

2025-04-18 12:52:24
news-image

புற்றுநோய் ஆபத்தை உருவாக்கும் ஞானப்பல்? 

2025-04-16 19:44:45
news-image

வெறும் 10 நாட்கள் போதும்… வித்தியாசத்தை...

2025-04-16 16:00:35
news-image

பயத்தில் நமது உடல் உறுப்புகள்..!

2025-04-16 15:34:29
news-image

சுவைக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் சிறந்தது கோணப்...

2025-04-16 12:55:52