ஆணைக்குழுவின் முன் இடம்பெற்ற செயற்பாடுகளின் போது பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சில சந்திப்புகள் கலந்துரையாடல்கள் இடம்பெற்றமை குறித்து தெரியவந்தது.
இந்த சந்திப்புகள் கலந்துரையாடலின் உண்மையான தன்மை குறித்து அறிந்துகொள்வது அவசியம். சட்டவிரோத தடுப்பு முகாம் வதைகூடங்களை உருவாக்கி பேணிவந்தமைக்கும் இந்த சந்திப்புகளிற்கும் இடையில் தொடர்புள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்கு இந்த சந்திப்புகளின் உண்மையான தன்மை குறித்து அறிந்துகொள்வதுஅவசியம்.
ஆணைக்குழுவின் குறிப்பு விதிமுறைகளின் படி, மேலே குறிப்பிடப்பட்ட சித்திரவதை முகாமை உருவாக்கி பேணி வந்ததால், பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் ஏதாவது சதி இடம்பெற்றதா என்பது குறித்து ஆராய்வது அவசியம்.
பட்டலந்த சந்திப்புகளில் கலந்துகொண்ட முக்கிய நபர்கள் சிலர் வழங்கிய வாக்குமூலங்களை நாங்கள் தற்போது இங்கே ஆராயவிரும்புகின்றோம். அவர்கள் அந்த சந்திப்புகள் தொடர்பில் தெரிவித்த விடயங்கள்,அந்த சந்திப்புகளில் ஆராயப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் விடயங்கள்.
சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் நளின் தெல்கொடவே களனி பொலிஸ் பிரிவில் சிரேஸ்ட அதிகாரி. களனி பொலிஸ் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தால்,தெல்கொடவிற்கு அது குறித்து தெரிந்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.அந்த சந்திப்புகளின் மீதுஅவர் நேரடி கட்டுப்பாட்டைசெலுத்தியிருப்பார்.
இதன் காரணமாக தெல்கொட இந்த சந்திப்புகள் குறித்து தெரிவித்த விடயங்களில் இருந்து நாங்கள் ஆரம்பிக்கின்றோம்.
ஆணைக்குழுவிற்கு அவசியமான அல்லது பொருத்தமான அந்த காலப்பகுதியில்,பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற இரண்டு மூன்று சந்திப்புகளில் கலந்துகொண்டுள்ளதாக தெல்கொட தெரிவித்தார்.
அந்த சந்திப்புகள் இடம்பெற்ற சரியான இடத்தை தெரிவிக்குமாறு ஆணைக்குழு அவரிடம் கேட்டவேளை அவர் ரணில்விக்கிரமசிங்கவின் சேர்கியுட் பங்களாவிலேயே அந்த சந்திப்புகள் இடம்பெற்றன என தெரிவித்தார்.எனினும் அதன் பின்னர் தான் தெரிவித்ததை மாற்றிய அவர் சேர்கியுட் பங்களாவிற்கு முன்னாலிருந்த வீட்டில் அந்த சந்திப்புகள் இடம்பெற்றதாக தெரிவித்தார்.
கிளர்ச்சிகாலத்தில் அந்த பகுதிக்கான பாதுகாப்பை ஒருங்கிணைப்பதற்காகவே இந்த சந்திப்புகள் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்த சந்திப்புகள் இடம்பெற்றதாக தெல்கொட தெரிவித்தார்.விக்கிரமசிங்க இந்த சந்திப்புகளிற்கு தலைமை தாங்கியுள்ளார்.
வழமைக்கு மாறான இந்த சந்திப்புகள் ,கூட்டங்களிற்கான சரியான காரணங்களை ஆணைக்குழு ஆராய்ந்தது.அமைதியையும் பொது ஒழுங்கையும் பேணுவதற்காகவே இந்த சந்திப்புகள் இடம்பெற்றன என தெல்கொட ஆரம்பத்தில் தெரிவித்தார்.தொடர்ந்து கேள்வி எழுப்பியவேளை இந்த சந்திப்புகளில் அந்த பகுதியில் காணப்பட்ட நாசகாரசெயற்பாடுகள் குறித்து ஆராய்ந்ததாக அவர் தெரிவித்தார்.
இறுதியாக அவர் பெருமளவு தயக்கத்துடன்,நாசகாரவேலைகளில் ஈடுபடுபவர்களை ஒடுக்குவதற்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கே இந்த சந்திப்புகள் இடம்பெற்றதாக தெரிவித்தார்.
ஏன் அவர் இதனை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு தயங்கினார் என நாங்கள் ஆச்சரியமடைந்தோம்.? 'நாசகார சக்திகளை ஒடுக்குதல் என்பதாலா"பொலிஸார் தங்களிற்கு சட்டரீதியாக அனுமதி வழங்கப்படாத, சட்டவிரோத படுகொலைகள் போன்ற விடயங்களை செய்ததன் காரணமாகவா?
ஏன் இந்த சந்திப்புகளிற்கு விக்கிரமசிங்க தலைமை தாங்கவேண்டும் என நாங்கள் கேள்வி எழுப்பினோம்.
சாட்சியமளித்தவர்களிடம் ஏன் இந்த சந்திப்புகள் கூட்டங்களிற்கு விக்கிரமசிங்க தலைமை தாங்கவேண்டு;ம் என கேள்வி எழுப்பினோம்? ஏனென்றால் அவர் பாதுகாப்புஅமைச்சரோ அல்லது பிரதிபாதுகாப்பு அமைச்சரோ இல்லை என நாங்கள் தெரிவித்தவேளை பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கினார் என தெல்கொட தெரிவித்தார்.
அதற்கு ஏன் பொலிஸாருக்கு அரசியல் தலைமைத்துவம் அவசியம் என கேள்வி எழுப்பியவேளை நாட்டில் அவ்வேளை நிலவிய சூழ்நிலை காரணமாக அரசியல் தலைமைத்துவத்தை பெறுவது அவசியம்,இந்த விடயத்தில் அரசியல் தலைமைத்துவத்தின் உத்தரவுகளை பின்பற்றுவதை தவிர வேறு வழியிருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
'நான் எனது தலையை பாறையில் கொண்டுபோய் மோதுவது சாத்தியமில்லை," என தெல்கொட தெளிவுபடுத்தினார்.
இந்த விடயத்தில்தான் வேறு எதனையும் செய்ய முடியாது,தான்நிலைமையை மாற்றினால், அல்லது,அரசியல் தலைமைத்துவத்தின் உத்தரவுகளை எற்க மறுத்தால் அது தனக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் இந்த சந்திப்புகளில் ஈடுபட்டதை நியாயப்படுத்த முடியாதவராக தெல்கொட காணப்பட்டார் , அவர் அந்த சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்களை பெருமளவிற்கு மறைத்துவிட்டார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்
தமிழில் ரஜீபன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM