சாதனை படைத்து வரும் அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' பட உருவாக்க காணொளி

Published By: Digital Desk 2

17 Mar, 2025 | 04:37 PM
image

அஜித் குமார் நடிப்பில் தயாராகி வரும் 'குட் பேட் அக்லி' திரைப்பட உருவாக்கம் தொடர்பாக படப்பிடிப்பு தள காணொளி இணையத்தில் வெளியாகி, இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இயக்குநரும், நடிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' எனும் திரைப்படத்தில் அஜித் குமார், திரிஷா, பிரபு, பிரசன்னா, யோகி பாபு, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், ஷைன் டாம் சாக்கோ, பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.‌

எதிர்வரும் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை தொகுத்து காணொளியாக படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் புதிய முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த காணொளியை மில்லியன் கணக்கிலான ரசிகர்கள் ரசித்து வரவேற்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right