விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்' படத்தின் முதல் தோற்ற பார்வை வெளியீடு

Published By: Digital Desk 2

17 Mar, 2025 | 04:02 PM
image

தமிழ் திரையுலகில் படமாளிகை மற்றும் டிஜிட்டல் தளத்தில் வணிக மதிப்புள்ள நட்சத்திர நடிகரான விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'இரண்டு வானம்' எனும் திரைப்படத்தின் படத்தின் முதல் தோற்றப் பார்வை இரண்டு புகைப்படங்களாக வெளியிடப்பட்டிருக்கிறது.

'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'இரண்டு வானம்' எனும் திரைப்படத்தில் விஷ்ணு விஷால், மமீதா பைஜூ முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். தினேஷ் கே. பாபு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இயக்குநர் ராம்குமார் நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் வெளியான 'ராட்சசன்' திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் இந்த 'இரண்டு வானம்' திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மற்றும் திரையுலக வணிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் இயற்கை எழில் சூழ்ந்த மலை பின்னணியில் நாயகனும், நாயகியும் தோன்றுவது முதல் தோற்றப் பார்வை வெளியாகி இருப்பது ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right