கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

17 Mar, 2025 | 04:00 PM
image

நிந்தவூர் - கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதியர்கள் பல கோரிக்கைகளைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (17) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அரச தாதியர்கள்  சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினம் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணிவரை 03 மணிநேரம் நடைபெற்றது.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவுகளைக் குறைத்தமை, பதவி உயர்வு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை, போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று தாதியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளால் தாதியர் சேவைக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் தாம் அனுபவித்து வந்த உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அரச தாதியர் சங்கத்தினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மேலும், வரவு - செலவு முன்மொழிவுகள் மூலம் தொழில்சார் கௌரவத்திற்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனை அங்கீகரிக்கவே முடியாது என்று அரச தாதியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் உள்ள முன்மொழிவுகளை வாபஸ் பெறுவதற்கோ அல்லது நியாயமான தீர்வை வழங்குவதற்கோ அரசாங்கம் இன்னும் தயாராக இல்லை எனவும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெஸ்ஃபெரிஒக்சமின் மெசிலேட் ஊசிமருந்துக் குப்பிகள் விநியோகிப்பதற்கு...

2025-12-11 17:23:43
news-image

மாலைதீவு மற்றும் இலங்கையிடையே விளையாட்டு மற்றும்...

2025-12-11 17:16:22
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்குThilakawardena Textile...

2025-12-11 20:58:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு10 மில்லியன்...

2025-12-11 20:57:03
news-image

கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளின் தனிப்பட்ட நிதியிலிருந்து‘Rebuilding...

2025-12-11 20:51:51
news-image

மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50...

2025-12-11 17:27:59
news-image

இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடலில்...

2025-12-11 17:15:58
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Maga...

2025-12-11 19:48:08
news-image

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு இரண்டு...

2025-12-11 19:41:49
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon...

2025-12-11 19:37:09
news-image

ஜேர்மன் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

2025-12-11 19:56:42
news-image

யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப...

2025-12-11 17:15:32