புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும் 'யுவன் ராபின்ஹூட்'

Published By: Digital Desk 2

17 Mar, 2025 | 04:02 PM
image

கன்னட திரையுலகில் பிரபலமான நடிகர் வீரன் கேசவ் தமிழில் நாயகனாக அறிமுகமாகும் 'யுவன் ராபின் ஹூட் ' படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் உருவாகும் 'யுவன் ராபின் ஹூட் ' எனும் திரைப்படத்தில் வீரன் கேசவ்,  அல்பிஃயா ஷேக் , ரித்விகா , பொன்வண்ணன்,  சுருதி சுதிர் , தேஷ் பாண்டே ,சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேத்தீவ் ராஜன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு மார்ட்டின் கிளமெண்ட்  இசையமைக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை பேசன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் சந்தோஷ் குமார் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' காந்தி என தனது தாயார் வைத்த பெயரை விரும்பாத நாயகன்,  அஹிம்சையுடன் வாழ்க்கையை நடத்த விரும்பாமல் தனது தந்தையின் பாணியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறார். இதனால் அவர் எதிர்கொள்ளும் சம்பவங்களும், சவால்களும் தான் படத்தின் கதை'' என்றார்.

கன்னட திரையுலகில் பிரபலமான இயக்குநரும், நடிகரும் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்கள் என்பதுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெறும் என்றும், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right