நுரையீரல் அழுத்தம் காரணமாக  45 வயதான ஆணிற்கு இயல்பான இதய மாற்று சத்திர சிகிச்சை செய்ய முடியாமல், நுரையீரல் அரிமா அனஸ்தோமீசிக் எனப்படும் பழைய இதயத்துடனேயே புதிதாக ஒரு இதயத்தைப் பொருத்தி சத்திர சிகிச்சை செய்து சாதனை செய்திருக்கிறார்கள் கோவையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள்.

இது குறித்து அந்த சத்திர சிகிச்சை நிபுணர் குழுவினர் தெரிவித்ததாவது..

ஒருவருக்கு நுரையீரல் அழுத்தம் காரணமாக இதய மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ளமுடியவில்லை. இந்நிலையில் ஆசிய கண்டத்திலேயே முதன்முறையாக ஏற்கனவே இருக்கும் இதயத்துடன் மற்றொரு புதிய இதயத்தைப் பொருத்து நவீன இதய மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொண்டோம். இதன் போது பழைய இதயத்துடன் புதிதாக ஒரு இதயத்தை பொருத்தினோம். தற்போது இரண்டு இதயங்களும் சேர்ந்து தன் பணியை மேற்கொண்டு வருகின்றன. 

இதய மாற்று சத்திர சிகிச்சைக்கு ஆளான ஆண் நோயாளிக்கு பொருத்தப்பட்டது பெண்ணின் இதயம். இந்த இதயம் ஏற்கனவே இருக்கும் இதயத்தின் பக்கத்தில் உள்ள இடைவெளியில் மிகத்துல்லியமாக பொருந்தும் வகையில்சிறியதாக இருந்தது வியப்பிற்குரிய விடயமாக இருந்தது. 

இரண்டு இதயங்களையும் 5 இரத்த குழாய்களைக் கொண்டு இணைத்துள்ளோம். அவற்றில் இரண்டு தூய்மையான இரத்தத்தை பாய்ச்சவும், மீதமுள்ள மூன்று குழாய்கள் அசுத்தமான இரத்தத்தை எடுத்துச்செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் துடித்துக் கொண்டிருக்கும் இதயத்துடன் பொருத்துவது தான் சற்று சவாலான பணியாக இருந்தது. 

தகவல் : சென்னை அலுவலகம்