யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக குடியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும் - சானக சம்பத் மதுகொட

17 Mar, 2025 | 03:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டும். விகாரையை அண்மித்த பகுதியில் வசிப்பவர்கள் உரிமம் கோருவதற்காக போலியான ஆவணங்களை முன்னிலைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சானக சம்பத் மதுகொட வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில்  திங்கட்கிழமை (17)  நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

 அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியல்வாதிகள் தொடர்பில் சமூக கட்டமைப்பில் வெறுப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் தான் அரசியல் செய்கிறோம். மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். மத தலங்கள் மற்றும் பிரிவெனா உட்பட மத பாடசாலைகள் அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.

மத நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கான திட்டங்களை குறிப்பிடவில்லை. மத தலங்களை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இதுவரையில் உறுதியான தீர்வு முன்வைக்கப்படவில்லை. இந்த விகாரை 1956 ஆம் ஆண்டு நகர திட்ட வரைபடத்தில் திஸ்ஸ விகாரை உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இந்த விகாரையை அண்மித்த பகுதியில் உள்ளவர்கள் உரிமை கோருவதற்காக போலியான ஆவணங்களை முன்னிலைப்படுத்தி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் விசேட குழுவை நியமிக்க வேண்டும். இந்த விகாரையை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் குடியிறுப்பவர்களை அகற்ற வேண்டும். ஆகவே இந்த பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும்.

முல்லைத்தீவு குருந்தூர் மலையிலும் இதே பிரச்சினை காணப்படுகிறது. நீதிமன்ற உத்தரவினால் ஆராய்ச்சி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் பௌத்த மத தொல்பொருள் சின்னங்கள் அழிவடைவதற்கு காரணியாக அமையும். 

குருந்தூர் மலையில் நில அளவையியல் திணைக்களம் சட்ட ரீதியில் காணி எல்லைகளை அடையாளப்படுத்தியுள்ள நிலையில் ஒரு தரப்பினர் தொடர்ந்து முரண்பாடுகளை ஏற்படுத்துகிறார்கள்.

வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் பௌத்த விகாரை மற்றும் தொல்பொருள் சின்னங்களை பிரச்சினைக்குரியதாக்கி அதனூடாக அரசியல் செய்கிறார்கள். 

வடக்கு மாகாணத்தில் 600 இடங்கள் தொல்பொருள் மையங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இடங்களை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரித்து, தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க வேணடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48