தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது தடவையாக ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ்கள் குவித்து அசத்தல்

17 Mar, 2025 | 02:50 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கையின் முன்னாள் சகலதுறை கிரிக்கெட் வீரர் திசர பெரேரா, தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது தடவையாக ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ்கள் குவித்து வரலாறு படைத்துள்ளார்.

இந்தியாவின் உதய்பூர், மிராஜ் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய லெஜென்ட்ஸ் லீக் (Asian Legends League) கிரிக்கெட் போட்டியிலேயே இந்த வரலாற்றுச் சாதனையை 36 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் திசர பெரேரா நிகழ்த்தினார்.

ஆப்கானிஸ்தான் பத்தன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் கடைசி ஓவரில் 6 சிக்ஸ்கள் குவித்த ஸ்ரீ லங்கன் லயன்ஸ் அணித் தலைவர் திசர பேரேரா, தொழில்முறை  கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு தடவைகள் ஒரே ஓவரில் 6 சிக்ஸ்கள் குவித்த முதலாவது வீரரானார்.

சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இதுவரை 15 வீரர்கள் ஒரே ஓவரில் 6 சிக்ஸ்கள் குவித்துள்ளனர்.

திசர பெரேரா இதற்கு முன்னர் பிரதான கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இராணுவ அணிக்காக  விளையாடியபோது புளூம்பீல்ட் கிரிக்கெட் அணிக்கு எதிராக 2021இல் ஒரே ஓவரில் 6 சிக்ஸ்களை விளாசியிருந்தார்.

41 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட அப் போட்டியில் 318 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு புளூம்பீல்ட் துடுப்பெடுத்தாடியது. 20 பந்துகள் மாத்திரம் மீதம் இருந்தபோது களம் புகுந்த திசர பேரேரா, எதிரணியின் பகுதிநேர பந்துவீச்சாளர் டில்ஹான் குரேயின் கடைசி ஓவரில் 6 சிக்ஸ்களை விளாசி அசத்தினார். ஆனால், புளூம்பீல்ட் அணி 6 விக்கெட்களை இழந்து 73 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது.

ஆப்கானிஸ்தான் பத்தன்ஸ் அணிக்கு எதிரான நீக்கல் போட்டியில் 19ஆவது ஓவர் நிறைவில் 72 ஓட்டங்களைப் பெற்றிருந்த திசர பேரேரா கடைசி ஓவரில் அயான் கானை எதிர்கொண்டார். 3 வைட்கள் உட்பட அயான் கான் வீசிய அந்த ஓவரில் திசர பெரேரா 6 சிக்ஸ்களை விளாசி 108 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 13 சிக்ஸ்களையும் 2 பவுண்டறிகளையும் விளாசி இருந்தார்.

மறுபக்கத்தில் மெவான் பெர்னாண்டோ 56 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 81 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 155 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஸ்ரீ லங்கன் லயன்ஸ் அணியின் ஆரம்ப வீரர்களான லியோ ப்ரான்சிஸ்கோ (2), திலக்கரட்ன டில்ஷான் (8) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.

இந்தப் போட்டியில் ஸ்ரீ லங்கன் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 230 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் பத்தன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்த 204 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பஞ்சாப் கிங்ஸ் 2ஆம் இடத்திற்கு முன்னேறியது,...

2025-05-01 03:22:34
news-image

DLS முறைமை பிரகாரம் பங்களாதேஷ் இளையோர்...

2025-04-30 19:36:08
news-image

SLC தேசிய சுப்பர் லீக்  கிரிக்கெட்:...

2025-04-30 19:37:04
news-image

கடைசியில் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் டெல்ஹியை...

2025-04-30 01:36:34
news-image

ப்ரதிக்கா சாதனை நிலைநாட்டிய மகளிர் மும்முனை...

2025-04-29 19:12:49
news-image

கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ், ஜெவ்னா கிங்ஸின் தொழில்முறை...

2025-04-29 17:16:24
news-image

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு...

2025-04-29 11:27:01
news-image

சர்வதேச பந்துவீச்சாளர்களை சிதறடித்து ரி20இல் மிக...

2025-04-29 01:47:32
news-image

14 வயது சிறுவன் ஐபிஎலில் குறைந்த...

2025-04-29 00:48:06
news-image

இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: இரண்டாவது...

2025-04-28 20:55:30
news-image

பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் டெல்ஹியை வீழ்த்தியது...

2025-04-28 01:51:26
news-image

லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெளுத்துக்கட்டியது மும்பை...

2025-04-27 20:55:35