இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க சாதாரண தர பரீட்சாத்திகளுக்கு அவசர தொலைபேசி இலக்கம்

17 Mar, 2025 | 02:42 PM
image

(எம்.மனோசித்ரா)

சீரற்ற காலநிலையால் ஏற்படக் கூடிய இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளக் கூடும் என சந்தேகிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அது தொடர்பில் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த பணிகளுக்காக விசேட குழுக்கள் தயார் நிலையிலுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பரீட்சை திணைக்களத்தில்  திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடளாவிய ரீதியில் 3663 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் 26ஆம் திகதி வரை இப்பரீட்சைகள் இடம்பெறும். 

எவ்வித பிரச்சினைகளும் இடையூறுகளும் இன்றி முதல் நாள் பரீட்சைகள் நிறைவடைந்துள்ளன. காலநிலையிலும் எவ்வித பாரிய பிரச்சினைகளும் இல்லை.

அவசர தேவைகள் தொடர்பில் மெய்நிகர் ஊடாக சகல மாகாண கல்வி பணிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு நிலைவரங்கள் தொடர்பில் தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

எதிர்வரும் தினங்களில் சீரற்ற காலநிலை ஏற்படும் பட்சத்தில் ஏதேனும் இயற்றை அனர்த்தங்களை எதிர்கொள்ள நேரிடும் என சந்தேகிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து இது குறித்து அறிவிக்க முடியும். அதற்கமைய தேவையான உதவிகளை வழங்குவதற்கு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 

எவ்வாறிருப்பினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய தரப்பினரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால் 1911 என்ற பரீட்சை திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

அதேவேளை பரீட்சாத்திகள் எவரேனும் முறையற்ற விதத்தில் நடந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48