மூதூர் பிரதேச செயலக எல்லைக்குற்பட்ட அனைத்து பிரதேசங்களையும், சமூகங்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட 'மூதூர் சிவில் ஒன்றியத்தின்' ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16) மூதூர் பேர்ல் கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
மூதூர் பிரதேச வாழ் பல்லின சமூகங்களிடையே புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், சர்வமதத் தலைவர்கள், திணைக்கள அதிகாரிகள்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள், விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மூதூர் சிவில் ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளிட்ட 140 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், மூதூர் சிவில் ஒன்றியம் தொடர்பாக கலந்து கொண்டோருக்கு குறுகிய அறிமுகம் வழங்கப்பட்டதோடு, இந்நிகழ்வின் முக்கியத்துவம் தொடர்பில் சர்வமதத் தலைவர்களின் உரையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு மூதூர் 3CD நிறுவனம் அணுசரனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM