நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தொழில் புரியும் அரச தாதி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (17) காலை 10:00 மணி முதல் பகல் 01:00 மணி வரை மூன்று மணித்தியாலயங்கள் சேவைகளை இடைநிறுத்தி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் தாதியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தொழில் புரியும் தாதியர்கள் வைத்தியசாலை நுழைவாயிலுக்கு அருகே நின்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு எதிரான வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி பணிப்பகிஸ்கரிப்பும், கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இதில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவுகளை குறைத்தல் மற்றும் பதவி உயர்வு முறையைக் குறைத்தல் ஆகிய பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை, எமது கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடின், தொடர் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தாதிய உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM