என்னை ஏ.ஆர். ரகுமானின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என தென்னிந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு கோரிக்கை விடுத்துள்ளார்.
சனிக்கிழமை லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நீர்ச்சத்து குறைவு காரணமாக ஏ.ஆர்.ரகுமானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் விரைந்து குணம் பெற வேண்டும் என சாய்ரா பானு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், என்னை ஏ.ஆர். ரகுமானின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில்,
'நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. நாங்கள் இருவரும் கணவன், மனைவி பந்தத்தில் தான் இருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். எந்தவகையிலும் அவருக்கு நான் அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. நாங்கள் பிரிந்திருந்தாலும், அவருக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன். என்னை இனி யாரும் முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM