மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு புக்கிட் குளூக்கோர், ஜாலான் காக்கி புக்கிட் என்ற இடத்தில் உணவு வாங்க சென்றிருந்த நவினையும் அவருடைய நண்பர் பிரவினையும் ஐவர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக சண்டைக்கு அழைத்து தாக்கியது.

குறித்த கும்பலில் நவின் படித்த பாடசாலையின் முன்னால் மாணவர்கள் இருவர் இருந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பிரவின் கடுமையான காயங்களுடன் தப்பியோவிட்டார். குறித்த குழுவினரிடம் சிக்குண்ட நவீன் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலமாக தாக்கப்பட்டுள்ளார்.

பின்னர் வைத்தியசாலையில் ஐந்து நாள்கள் கோமாவிலேயே இருந்த பின்னர் நவினின் சுயநினவுக்கு வராமலேயே மூளைச் சாவடைந்த நிலையில் உயிரிழந்தார்.

வன்கொடுமைக் கும்பலால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த மாணவன் டி.நவினின் இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளார்.

நவினை தாக்கிய குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.