வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவியின் சடலங்கள் மீட்பு

Published By: Vishnu

16 Mar, 2025 | 09:24 PM
image

பொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றத்தை இனங்கண்ட பொதுமக்கள் விடுதி ஒன்றில் இரண்டு பேரின் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இரண்டு சடலங்கள் கிடக்கும் அருகாமையில் நஞ்சு போத்தல் இருப்பதாகவும், சிறிது காலம் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொழும்பு பகுதியில் கூலி தொழில் செய்து வந்ததாகவும் கொழும்பிலிருந்து தனது வீட்டுக்கு வருகை தந்து நான்கு நாட்கள் கடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததோடு இந்ந இரண்டு சடலங்கள் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சடலமாக மீட்கப்பட்ட கணவன் 38வயதுடைய சின்னையா விஜயகுமார் எனவும் 37வயதுடைய பெருமாள் கௌரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இருவரின் சடலங்களும் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51