(நெவில் அன்தனி)
காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற கொழும்பு அணிக்கும் யாழ்ப்பாணம் அணிக்கும் இடையிலான SLC தேசிய சுப்பர் லீக் 4 நாள் கிரிக்கெட் போட்டியில் கொழும்பு அணி 87 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இப் போட்டியில் 454 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணி சகல விக்கெட்களையும் இழந்து 366 ஓட்டங்ளைப் பெற்று தோல்வி அடைந்தது.
வெற்றிபெறுவதற்கு மேலும் 381 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 73 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த யாழ்ப்பாணம் அணி போட்டியை வெற்றிதோல்வியின்றி முடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
மூன்றாம் நாளன்று ஆட்டம் இழக்காமல் இருந்த ஷெவன் டெனியலும் ரவிந்து ரசன்தவும் 2ஆவது விக்கெட்டில் 161 ஓட்டங்களைப் பகிர்ந்து கொழும்பு அணிக்கு சோதனையைக் கொடுத்தனர்.
ஷெவன் டெனியல் 82 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரைத் தொடர்ந்து அஹான் விக்ரமசிங்க (22), அணித் தலைவர் ஜனித் லியனகே (7), ரவிந்து ரசன்த ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.
ரவிந்து ரசன்த 182 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகளுடன் 107 ஓட்டங்களைப் பெற்றார்.
மத்திய வரிசையில் அஞ்சல பண்டாரவும் சாமிக்க கருணாரட்னவும் தலா 51 ஓட்டங்களைப் பெற்றதுடன் 6ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து யாழ்ப்பாணம் அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்ததும் கொழும்பு அணி வெற்றிபெறுவது உறுதியாயிற்று.
கடை நிலை வீரர்களில் ஜெவ்றி வெண்டசே 17 ஓட்டங்களையும் நிமேஷ் விமுக்தி 12 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் முடித்த லக்ஷான் 84 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சரித் அசலன்க 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 109 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
எண்ணிக்கை சுருக்கம்
கொழும்பு 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 386 (அவிஷ்க பெர்னாண்டோ 144, கவின் பண்டார 77, சரித் அசலன்க 51, ஜெவ்றி வெண்டசே 86 - 6 விக்., மேர்வின் அபினாஷ் 93 - 2 விக்.)
யாழ்ப்பாணம் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 246 (அஞ்சல பண்டார 88, ஜனித் லியனகே 51, நிஷான் பீரிஸ் 59 - 5 விக்., கசுன் ராஜித்த 34 - 2 விக்.)
கொழும்பு 2ஆவது இன்: 313 - 6 விக். டிக்ளயார்ட் (தனஞ்சய லக்ஷான் 75, துஷான் ஹேமன்த 58 ஆ.இ., கவின் பண்டார 57, அவிஷ்க பெர்னாண்டோ 41, மேர்வின் அபினாஷ் 63 - 2 விக்., ஜெவ்றி வெண்டசே 85 - 2 விக்., நிமேஷ் விமுக்தி 92 - 2 விக்.)
யாழ்ப்பாணம் - வெற்றி இலக்கு 454 ஓட்டங்கள் - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 366 (ரவிந்து ரசன்த 107, ஷெவன் டெனியல் 82, அஞ்சல பண்டார 51, சாமிக்க கருணாரட்ன 51, முடித்த லக்ஷான் 84 - 4 விக்., சரித் அசலன்க 56 - 2 விக்., நிஷான் பீரிஸ் 109 - 2 விக்.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM