அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் : பணிபகிஷ்கரிப்புக்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள் - ரவி குமுதேஷ்

16 Mar, 2025 | 08:34 PM
image

(செ.சுபதர்ஷனி)

மக்கள் பக்கம் நின்று முடிவுகளை எடுப்பதாக அச்சுறுத்தும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வரலாற்றை மறந்துவிட்டாலும், பல ஆட்சியாளர்கள் தொழிற்சங்கங்களை அடக்குவதற்காக பொதுமக்களுடன் சேர்ந்து செயல்பட்டனர் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பில் திங்கட்கிழமை (17) இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை தோல்வி அடையும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை (18) சுகாதார தொழிற்சங்கள் நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

பட்டலந்த வதை முகாமில் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களின் தலைகளை துண்டித்து, கண்களைப் பிடுங்கிய ஆட்சியாளர்கள் மக்கள் பக்கம் நின்று கொண்டு அவ்வாறு செய்ததாகவே கூறினார்கள்.

மக்கள் பக்கம் நின்று முடிவுகளை எடுப்பதாக அச்சுறுத்தும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வரலாற்றை மறந்துவிட்டாலும், பல ஆட்சியாளர்கள் தொழிற்சங்கங்களை அடக்குவதற்காக பொதுமக்களுடன் சேர்ந்து செயல்பட்டனர் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

நாங்கள் புதிதாக எதையும் கேட்கவில்லை. 40 ஆண்டுகளாக சுகாதார ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகளையே மீள வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.

24 மணி நேர சுகாதார சேவைகளில் ஈடுபடும் இவை அத்தியாவசியமானவை என்பதை அரசாங்கம் உணர வேண்டும்.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அரசியலை அப்புறப்படுத்தி இப்பிரச்சினைக்கு தொழில் ரீதியாக தீர்வு காண வேண்டும்.

அமைச்சர் ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார தலைவர்களுக்கிடையில் இடம்பெறும் கலந்துரையாடல்களின் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளோம்.

அத்தோடு, அவை தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதையும் சுகாதார அமைச்சே பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர் ஜயதிஸ்ஸவின் கீழ் உள்ள அரசுக்கு ஆதரவாக செயற்படும் அதிகாரிகளால், தொழிற்சங்கங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதித்திட்டங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். இதேவேளை, நாளை 17 ஆம் திகதி மீண்டு சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல் இடம்பெற உள்ளது.

இப்பேச்சுவார்த்தை தோல்வியடையும் பட்சத்தில் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 24 மணி நேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளன.

மேலும் நோயாளர்களின் நலன் கருதி அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளின் போது சுகாதார ஊழியர்கள் கடமையில் ஈடுபட தயாராக உள்ளனர்.

இதேவேளை சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேறு வைத்தியசாலை மற்றும் சிறுநீரக வைத்தியசாலை உள்ளிட்ட விசேட தேவையுடைய வைத்தியசாலைகளில் எவ்வித தொழிற்சங்க நடவடிக்கையும் முன்னெடுக்கப்படமாட்டாது.

இதுவரை சுமார் இருபது தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கைக்கு ஏகமனதாக சம்மதம் தெரிவித்துள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51