உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படாமல் பாதுகாத்துக்கொள்ள அவதானம் செலுத்த வேண்டும் ; ரோஹன ஹெட்டியாரச்சி

16 Mar, 2025 | 05:21 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

உள்ளூராட்சி மன்ற தேர்லில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் சுயேட்சை குழுக்கள் தங்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படாமல் பாதுகாத்துக்கொள்ள மிகவும் அவதானம் செலுத்தவேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுகள் இன்றுமுதல் ஏற்றுக்கொள்ளப்பட இருப்பதால் அதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  17 ஆம் திகதி முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இடம்பெற இருக்கிறது.

தேர்தில்ல போட்டியிட இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தங்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதற்கு காரணமாக அமையும் விடயங்கள் தொடர்பில் அதிக வகனம் செலுத்த வேண்டும். 

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அந்த விடயங்கள் தொடர்பில் மிகவும் அவதான் செலுத்தி வேட்புமுமனுக்களை பூரணப்படுத்த வேண்டும்.

குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவ கோட்டாவை வழங்காமல் இருப்பது, பிறப்புச்சான்றிதழ் வழங்காமல் இருப்பது, பெண்கள் என்பதை உறுதிப்படுப்படுத்துவதற்கான சத்தியக்கடதாசிகள் போன்ற ஆவணங்களை வழங்காமை காரணமாக கடந்த தேர்தல்களின்போது அதிகமான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்ததை நாங்கள் கண்டோம். 

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில்162 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. அதேநேரம் பல வழக்குகளும் தொடுக்கப்பட்டிருந்தன. 

அதனால் நிராகரிக்கப்படாமல் பாதுகாத்துக்கொள்ள அரசியல் கட்சிகள் வேட்புமனுக்கள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் மிகவும் அவதானம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இந்தமுறை தேர்லில் அதிகமான கட்சிகள் போட்டியிடும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக அதிகமான சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தி இருக்கிறது. 

அதனால் கட்சிகள் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் இல்லாதவர்களை வேட்பாளர்களாக பெயரிட நடவடிக்கை எடுக்கவேண்டும். 

வாக்காளர்கள் கட்சிக்கே வாக்களிக்க இருப்பதால் கட்சிகள் திறமையான வேட்பாளர்களை களமிறக்க தவறினால், அந்த கட்சிகள் வாக்காளர்களால் நிராகரிக்கப்படும் நிலை இருக்கிறது.

அதேநேரம் வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்கவேண்டி இருக்கிறது. 

வேட்பாளர்கள் தங்களின் முகப்புத்தகத்தில் அல்லது இணையத்தளத்தில் இதனை பதிவேற்ற முடியும். வேட்பாளர்கள் தங்களின் தூய்மையான அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்த தங்களின் சொத்துக்கள் பொறுப்புக்கள் அறிக்கையை பெப்ரல் சுயாதீன தேர்ல்கள கண்காணிப்பு குழுவுக்கு கையளிப்பதாக இருந்தால் அதனை பெற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்..

அத்துடன் தேர்தல் செலவு சட்டம் இந்த தேர்தலின்போதும் அமுல்படுத்தப்படும். அதனால் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவுகள் தொடர்பில் நாளாந்தம் பதிவு செய்துகொள்வதன் மூலம் இதனை தேர்தல் நிறைவடைந்து 21 நாட்களுக்குள் கையளிப்பது சிரமமாகாது. 

அதனால் வேட்பாளர்கள் யாராவது தேர்தல் முடிவடைந்து 21 நாட்களுக்குள் கையளிக்க தவறினால் அவர்களுக்கு 3வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், அதேநேரம் அவர்கள் எதிர்வரும் 5 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாமல் போகலாம். அதனால் இதுதொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக்கொள்கிறோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48