நோயாளிகளை சிரமப்படுத்தும் வகையில் செயல்பட்டால், மக்கள் பக்கம் நின்று முடிவுகளை எடுப்போம் - சுகாதார அமைச்சர்

Published By: Digital Desk 2

16 Mar, 2025 | 05:18 PM
image

(செ.சுபதர்ஷனி)

நோயாளிகளை பணயக்கைதிகளாக பிடித்து, சிரமத்திற்கு ஆளாகி, சுகாதார சேவையை சீர்குலைக்கும் வகையில் எவரேனும் செயற்பட்டால், தற்போதைய அரசாங்கம் பொதுமக்கள் பக்கம் நின்று அவர்கள் சார்பான தீர்மானங்களை எடுக்க கடமைப்பட்டுள்ளதாக  சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு அகில இலங்கை சிறுநீரக நோயாளிகள் சங்கத்தால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நோயாளிகளை பணயக்கைதிகளாக பிடித்து, சிரமத்திற்கு ஆளாகி, சுகாதார சேவையை சீர்குலைக்கும் வகையில் எவரேனும் செயற்பட்டால், தற்போதைய அரசாங்கம் பொதுமக்கள் பக்கம் நின்று அவர்கள் சார்பான                தீர்மானங்களை எடுக்க கடமைப்பட்டுள்ளது. அதற்காக தயங்காமல் செயற்பட தாயாக உள்ளது என்பதையும் கூற விரும்புகிறேன். மேலும், தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் மக்களின் சுகாதார நிலை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதாகும்.

ஆகையால் அதை சகல சுகாதார ஊழியர்களும் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவார்கள் என சுகாதார அமைச்சும் அரசாங்கமும் நம்பிக்கை கொண்டுள்ளது. சுகாதார நிபுணர்களுடன் கலந்துரையாடி தீர்க்க முடியாத பிரச்சனைகள் எதுவும் இல்லை. எந்த நேரத்திலும் அரசாங்கம் அவர்களுக்கான ஆதரவை தயாராக உள்ளது. கடந்த அரசாங்கங்களைப் போலல்லாமல், தற்போதைய அரசாங்கத்துடன் தங்களுக்கு இருக்கும் எந்த ஒரு பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடிய அதற்கான தீர்வினை பெறக் கூடிய நிலையில் மக்களும் சுகாதார நிபுணர்களும் உள்ளனர்.

எச்சந்தர்ப்பத்திலும் மக்களுடன் நின்று தீர்வுகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது. இந்நாட்டில் சுகாதாரத் துறையில் சுமார் ஒன்றரை இலட்சம் சுகாதார ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் சேவைகள் நாட்டிற்கு அவசியமானவை. பல்வேறு சிரமங்களுடன் உள்நோயாளர் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு என மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உயர் தரமான சேவையை வழங்குவது சுகாதார நிபுணர்களின் பொறுப்பு மற்றும் கடமை என்பதையும் நினைவு கூற விரும்புகிறேன்.

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உயர்தரமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வதே அரச நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றின் பிரதான நோக்கமாகும். இதற்காக மக்கள் செலுத்தும் வரி பணத்தை அரசாங்கம் செலவிடுகிறது. இந்த நாட்டு மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் ஒவ்வொரு வரி ரூபாக்கும் மிக உயர்ந்த மதிப்பை வழங்க வேண்டும் என்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். தேசிய திட்டத்தின்படி செயல்படுவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

எந்த சூழ்நிலையிலும் அரசியல்வாதிகளின் நற்பெயரை அதிகரிக்க விரும்பவில்லை. மாறாக மக்களுக்கு தொடர்ந்து சேவைகளை வழங்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற தேசிய...

2025-04-21 11:22:39
news-image

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 174...

2025-04-21 10:37:57
news-image

சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு

2025-04-21 11:16:44
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடைவிதிக்கவேண்டும்...

2025-04-21 11:05:15
news-image

மைத்திரிபால சிறிசேன சி.ஐ.டி.யில் ஆஜர் !

2025-04-21 10:52:39
news-image

ஹட்டனில் லொறி விபத்து - மூவர்...

2025-04-21 10:27:27
news-image

மதுபான களியாட்டத்தில் தகராறு ; கூரிய...

2025-04-21 10:22:17
news-image

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது...

2025-04-21 10:27:18
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167...

2025-04-21 09:57:23
news-image

பொலன்னறுவையில் கார் - மோட்டார் சைக்கிள்...

2025-04-21 09:39:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்...

2025-04-21 09:02:07
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமான நிலையில் காற்றின்...

2025-04-21 10:57:30