உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்!

17 Mar, 2025 | 09:10 AM
image

(இராஜதுரை ஹஷான்)

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்  தேர்தலுக்கு இன்று திங்கட்கிழமை (17) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை (20) வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சரியான தகவல்களுடன் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனுப்பத்திரங்களையும், சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட காலவகாசம் நாளை  நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. தேர்தல் பணிகளில் ஈடுபட உத்தேசித்துள்ள அரச உத்தியோகஸ்த்தர்கள் தவறாமல் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி  அதிகார சபைகள் தேர்தலுக்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு உத்தேசித்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் ' சரியாகவும், தெளிவாகவும் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனு பத்திரத்தில் ஒரு பிரதியை மாத்திரம் அத்துடன் இணைக்கப்பட வேண்டிய அனைத்து இணைப்புக்களுடன் உரிய காலப்பகுதியினுள் உரிய மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தல் வேண்டும்.

இளம் வேட்பாண்மையை உறுதிப்படுத்துவதற்காக மேலதிக மாவட்டப் பதிவாளரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதியை சமர்ப்பித்தல் வேண்டுமென்பதுடன், அவ்வாறில்லையேல் சமாதான அல்லது சத்திய ஆணையாளர் ஒருவரால் அத்தாட்சிப்படுத்தி வயதை உறுதிப்படுத்துகின்ற சத்தியக் கடதாசியொன்றினை வேட்புமனுப்பத்திரத்தில் இணைத்து சமர்ப்பித்தல் வேண்டும்' என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத்  தேர்தலுக்கான கட்டுப்பணம் வைப்பிலிடல் மற்றும் வேட்புமனுக்களை கையளித்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 3 ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதற்கமைய கடந்த 3 ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் கட்டுப்பணத்தை வைப்பிட்டன. கட்டுப்பணம் வைப்பிலிடலுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் நாளை மறுதினம் புதன்கிழமையுடன் (19) நிறைவடைகிறது.

இன்று திங்கட்கிழமை  (17) முதல் புதன்கிழமை (19), மற்றும் எதிர்வரும் வியாழக்கிழமை (20) நண்பகல் வரை வேட்புமனுக்களை சமர்ப்பித்தல் அந்தந்த மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெறும்.

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட காலவகாசம் திங்கட்கிழமை (17) நள்ளிரவுடன் நிறைவடையும். ஆகவே சரியான தகவல்களுடன் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. விண்ணப்பங்களை கையளிப்பதற்கு இனி காலவகாசம் வழங்கப்படமாட்டாது.

அத்துடன் பூநகரி பிரதேச சபை (கிளிநொச்சி மாவட்டம்) மன்னார் பிரதேச சபை (மன்னார் மாவட்டம்) மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை (அம்பாறை மாவட்டம்) ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தல் கடந்த 10 ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் இடம்பெறுகின்ற நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி (புதன்கிழமை) நிறைவடையும். இந்த பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் 2025.03.24 முதல் 2025.03.27 ஆம் திகதி வரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலன்னறுவையில் கார் - மோட்டார் சைக்கிள்...

2025-04-21 09:39:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்...

2025-04-21 09:02:07
news-image

இன்றைய வானிலை

2025-04-21 06:17:24
news-image

சாவகச்சேரியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர்...

2025-04-21 02:33:37
news-image

யாழில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர்...

2025-04-21 02:14:25
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது...

2025-04-20 21:29:43
news-image

ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி...

2025-04-20 21:22:18
news-image

ஜனாதிபதி அநுரகுமார ட்ரம்ப்பை நேரடியாக சந்தித்து...

2025-04-20 21:25:53
news-image

உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல்; குடும்பஸ்தர் படுகாயம்!

2025-04-20 21:25:46
news-image

ஊழல் அரசியலில் ஈடுபட்டவர்கள் தற்போது குழப்பமடைந்துள்ளனர்...

2025-04-20 21:20:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அரசியல் மயப்படுத்தி...

2025-04-20 20:54:36
news-image

யாழில் மூதாட்டி ஒருவர் பொல்லால் தாக்கி...

2025-04-20 21:20:24