சாமிமலை ஓல்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக குடமுழக்கு பெருசாந்தி பெருவிழா

16 Mar, 2025 | 03:56 PM
image

சாமிமலை ஓல்டன் நிலாவத்தை தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக குடமுழக்கு பெருசாந்தி பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (16)  வெகு கோலகலமாக இடம்பெற்றது. 

இதில் நேற்று சனிக்கிழமை (15)  பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகங்களுக்கு என்னைகாப்பு நிகழ்வு இடம் பெற்றது. 

இன்று விநாயகர் வழிபாடு இடம்பெற்றதோடு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் ஆலயத்திற்கு பக்தர்கலால் திர்த்தம் எடுத்து சென்று சிவனுக்கு அபிஷேகம் இடம்பெற்றது. 

அதனை தொடர்ந்து யாகசாலையில் பஞ்ச குண்டம் யாகம் இடம் பெற்று பிரதான கும்பம் அரோகரா கோசத்துடன் மேலவாத்தியங்கள் மூலங்க ஊர்வலமாக சென்று ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான கோபுரம் கலசங்களுக்கு குடமுழக்கு செய்யப்பட்டது. 

மூலஸ்தானத்தில் வைக்கப்பக்டுள்ளது.  கருமாரியம்மனுக்கு விஷேட அலங்கார அபிசேகம் இடம்பெற்றது இந்த கும்பாபிசேகத்திற்கான கிரியைகள் பிரதான குருக்கல் சத்யோயாத சிவச்சாரியார் தலைமையில் இடம்பெற்றதோடு பெருந்திரலான பக்த அடியார்களும் கலந்து கொண்டனர். இதேவேளை பக்த அடியார்களுக்கு அண்ணதானமும் வழங்கி வைக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்