அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

16 Mar, 2025 | 03:55 PM
image

சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் வீரமுனை வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகின்ற கே.ஆர்.எம். றிசாட்தின் வெற்றிக்கு உழைப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையும் நிகழ்வு கே.ஆர்.எம். றிசாட் தலைமையில் அவருடைய இல்லத்தில் நேற்று (15) சனிக்கிழமை இரவு வேளையில் இடம்பெற்றது.

கடந்த காலங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்கு உழைத்த இவர்கள் அக் கட்சியில் பெருத்தமான வேட்பாளர்கள் நியமிக்கப்படாமையின் காரணமாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளில் உள்ள குறைபாடுகள் காரணமாகவும் ஸ்ரீ  லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து அக் கட்சியினால் வீரமுனை வட்டாரத்தில் வேட்பாளராக போட்டியிடுகின்ற கே.ஆர்.எம். றிசாட் அவர்களை வெற்றி பெற செய்வதற்கு தன்னுடைய முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்கள் தெரிவித்தனர்.

இவ் இணைவு நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளரான ஏ.நசார் தலைமையிலான குழுவினர் வீரமுனை வட்டாரத்தில் வேட்பாளராக போட்டியிடுகின்ற கே.ஆர்.எம். றிசாட் அவர்களை வெற்றிக்காக இணைந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், முன்னால் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எம்.சௌபீர், எம்.ஐ.எம். உவைஸ் (ஸ்டார்), வீரமுனை வட்டார வேட்பாளர் எம்.ஏ.சி. உவைஸ், எம்.யூ.எம். றுமைஸ், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர்...

2025-04-26 10:34:34
news-image

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின்...

2025-04-26 10:26:27
news-image

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

2025-04-26 11:22:06
news-image

அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்...

2025-04-26 11:55:15
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல்...

2025-04-26 11:29:32
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை...

2025-04-26 10:11:10
news-image

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல்...

2025-04-26 09:49:35
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...

2025-04-26 09:34:16
news-image

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர்...

2025-04-26 10:07:52
news-image

இன்றைய வானிலை

2025-04-26 06:12:09
news-image

ஊழல், படுகொலை, ஆள் கடத்தல்களில் ஈடுபட்டோர்,...

2025-04-26 01:34:46
news-image

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பொலிசார் கோரிய...

2025-04-26 01:21:08