பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை - நிராகரித்தார் ரணில்

16 Mar, 2025 | 02:56 PM
image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தான் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

1987 -89 இல் ஜேவிபியின் கிளர்ச்சி உச்சகட்டத்தில் இருந்தவேளை பியகமவில் காணப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய நிறுவனங்களிற்கு பாதுகாப்பை வழங்கிய பாதுகாப்பு படையினருக்கு தங்குமிடங்களை வழங்குமாறு அப்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த ரஞ்சன் விஜயரட்ண எனக்கு விடுத்த உத்தரவை நான் நடைமுறைப்படுத்தியது  குறித்தே பட்டலந்த ஆணைக்குழு என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளது என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

1987 இல் இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் ஜேவிபியினர் நாடாளவிய ரீதியில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

அக்காலப்பகுதியில் மிக முக்கியமான பகுதிகளை பாதுகாக்கும் பொறுப்பை ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தன அமைச்சர்களிடம் ஒப்படைத்தார்.

பியகம பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சுதந்திர வர்த்தக வலயம் உட்பட பொருளாதார ரீதியில் முக்கியமான பல கட்டமைப்புகள் காணப்பட்டன.

இந்த பகுதிகளை பாதுகாப்பதற்காக இராணுவத்தை பயன்படுத்தினார்கள்.

பாதுகாப்பு படையினரை உள்வாங்குவதற்காக கைவிடப்பட்ட கட்டிடங்கள் ,இலங்கை உரஉற்பத்தி கூட்டு;த்தாபனத்தின் கைவிடப்பட்ட வீடுகளை பாதுகாப்பு படையினரின் பாவனைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.அக்காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையின் பல ஊழியர்கள் அந்த வீடுகளில் வசித்து வந்தனர்.

இந்த பயங்கரமான காலப்பகுதியில் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டது.அதன் பொறுப்பதிகாரி கொல்லப்பட்டார்.

பிரதிபாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ண என்னை தொடர்புகொண்டு எவரும் வசிக்காத நிலையில் உள்ள வீடுகளை பாதுகாப்பு படையினருக்கும் பொலிஸாருக்கும் அவர்களின் பாதுகாப்பிற்காக  வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து அந்த வீடுகளின் நிர்வாகி களனி பொலிஸ் பிரிவின் தலைமை அதிகாரி நளின் தெல்கொடவிடம் அந்த வீடுகளை கையளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.

அதிகாரத்திலிருந்த அரசாங்கம் நாட்டில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கும்,பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கும் நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கைகளை எடுத்தது.

1994 இன் பின்னர் ஜனாதிபதி சந்திகா குமாரதுங்க பந்தலந்த பகுதியில் காணப்பட்ட சித்திரவதை முகாம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஆணைக்குழுவை நியமித்தவேளை , பல தனிநபர்கள் ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டனர்.நானும் சாட்சியாக அழைக்கப்பட்டேன்.அவ்வேளை நான் எதிர்கட்சிதலைவராகயிருந்தேன்.

அரசியல் நோக்கங்களிற்காகவே பட்டலந்த ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது எனினும் ஆனால் அந்த நோக்கம் வெற்றியளிக்கவில்லை.

வீடுகளை வழங்கும் பணியை பொலிஸ்மா அதிபர் ஊடாகவே முன்னெடுத்திருக்கவேண்டும் ஆனால் ,நான் அதனை வழங்கியமை தொடர்பிலேயே என்மீது குற்றம்சுமத்தப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48