வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான் ; என்ன நடந்தது ?

Published By: Digital Desk 3

16 Mar, 2025 | 12:52 PM
image

ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவு காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது வீடு திரும்பியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முக்கிய பிரபலமாக இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் விளங்கி வருகிறார். இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் பல மொழிகளில் பல வெற்றி பாடல்களையும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்றைய தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, இன்று காலை 7.30 மணிக்கு அவரை சென்னையில்  தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் அவரது உடல்நிலையை வைத்தியர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், ஏ.ஆர்,ரகுமான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right