இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள இடங்கொடை, சிங்கள கொட மேற்பிரிவு தனியார் தோட்டத்தில் தொழில் புரியும் சுமார் 85 குடும்பங்கள் மண்சரிவு தற்போது இவர்கள் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். அருகில் உள்ள தமிழ் பாடசாலையான சிங்களகொட இ/தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பகல் நேரங்களில் தமது வீடுகளிலும் இரவு வேளையில் அப்பாடசாலையிலும் தங்குவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இருந்து வந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது உடனடியாக அப்பகுதியில் உள்ள 21 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை வெளியேறும்படி கேட்டுக் கொண்டனர்.
அத்துடன் நகரத்திற்கு செல்லும் குறுக்குப் பாதையில் அமைந்துள்ள பாலமொன்று வெடித்திருப்பதாகவும் அதில் பயணிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மேலும் இவர்கள் வேறு பாதையில் அவசர தேவைகளுக்காக நகருக்கு செல்வது என்றால் 6 கிலோ மீற்றர் தூரம் அப்பாதையில் அனுபவமுள்ள முச்சக்கர வண்டி சாரதிக்கு ரூபா 1500 செலுத்தியே செல்ல வேண்டி இருப்பதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். சம்பந்தப்பட்டவர்கள் குறுக்குவழி செல்லும் பாலத்தையாவது உடனடியாகச் சீர் செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
அத்துடன் கடந்த 12 ஆம் திகதி பலாங்கொடை பெட்டிகல கீழ்ப்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான குழுவினரும் பலாங்கொடை பிரதேச சபை முன்னாள் உப தலைவர் ஏ.எஸ். விஜயகுமாரனும் அத்தோட்டப் பகுதிக்கு சென்று உணவு, உடை உள்ளிட்ட பொருட்களை கொடுத்ததுடன் மேற்படி மண்சரிவு சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுத் தருவதாக விஜயகுமாரன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM